என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.


    பொன்னியின் செல்வன்

    இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் இப்படம் நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படம் 'சியான் 61'.
    • இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படம் 'சியான் 61'. இந்த படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.


    சியான் 61

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், 'சியான்61' படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    சியான் 61

    அந்த பதிவில், "சியான்61 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு கில்லர் ரைடாக இருக்கப்போகிறது. இசையை பொருத்தவரை மிகவும் சுவாரஸ்யமான கதை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘நானே வருவேன்’.
    • இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    நானே வருவேன்

    வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    நானே வருவேன் போஸ்டர்

    அதன்படி, இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி தளம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் வெங்கட் பிரபு என்சி 22 படத்தை இயக்கி வருகிறார்.
    • இவரின் வீடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு 'சென்னை -28' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான, மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மதலீலை போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


    வெங்கட் பிரபு

    தற்போது இவர் நாகசைதன்யா நடிப்பில் என்சி22 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் சத்யா "என்சி22 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தீபாவளி ஸ்பெஷல்.. மறைந்திருக்கும் திறமை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படம் ‘என்பிகே 107’.
    • இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 'என்பிகே 107' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    வீர சிம்ஹா ரெட்டி

    அதன்படி, இந்தப் படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிட்டு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இதன் டைட்டில் போஸ்டரையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு சங்கராந்திக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்து வரும் படம் ‘கேடி - தி டெவில்’.
    • இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் 'ஷோமேன்' பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதன்படி, இந்த படத்திற்கு 'கேடி - தி டெவில்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.


    அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசருக்கு கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஹீரோக்கள் குரல் கொடுத்துள்ளனர். இதன் தமிழ் பதிப்புக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இந்தி மற்றும் மலையாளப் பதிப்புக்கு சஞ்சய் தத், மோகன்லால் மற்றும் கன்னட பதிப்பிற்கு இயக்குனர் பிரேம் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.


    இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பிரேம் பேசியதாவது, "எங்கே நல்லது இருக்கிறதோ, அங்கே கெட்டதும் இருக்கும். உதாரணத்திற்கு, ராமன் இருந்தபோது, ராவணனும் இருந்தான். படத்தில் இதே போன்ற வரிகள் உள்ளன. இந்தப்படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல, காதல் மற்றும் அறம் கலந்த கதை. இந்த படம் கேஜிஎஃப் மற்றும் புஷ்பாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம்" என்று கூறினார்.

    இப்படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தகக்து.



    • நடிகை மீராமிதுன் வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களாகவே தலைமறைவாக உள்ளார்.
    • இவரை கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார் மனு அளித்துள்ளார்.

    பிரபல நடிகை மீராமிதுன். இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


    மீராமிதுன்

    இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார். போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்' என்றார்.


    மீராமிதுன்

    இதைத்தொடர்ந்து மீரா மிதுனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை செயல்படுத்துவதற்காக அவரை பல இடங்களில் தேடியும் இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றி வருவதால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் தலைமறைவாக இருக்கும் அவர் பெங்களூரில் இருப்பதாக தாகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது அவர் வேறு இடத்திற்கு தப்பி சென்றுவிட்டதாக கவல்துறை தெரிவித்தது.


    மீராமிதுன்

    அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அவர் செல்போன் நம்பரை மாற்றி வருவதாகவும் ஏற்கனவே வைத்திருந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விரைவில் மீராமிதுனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.


    மீராமிதுன்

    இந்நிலையில், நேற்று மாலை மீரா மிதுன் தாயார் ஷியாமலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் தங்களின் தொடர்பில் இல்லை. வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு கூறியுள்ளார். தற்போது, இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் 'சைரன்', 'ஜெ.ஆர்.30' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


    ஜெயம் ரவி

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    • புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டால்கூட மீடியாவில் வந்து சண்டை போடுகிறார்கள்.
    • தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன்.

    நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. மலேசியாவில் தொழில் தொடங்க அந்த பெண் பப்லுவுக்கு உதவி புரிந்ததாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும் பரவலாக பேசப்பட்டது. இதுபற்றி பப்லு விளக்கம் அளித்துள்ளார்.

    'திருமணம் செய்துகொண்டதாக பலர் போன் போட்டு கேட்கிறார்கள். திருமணம் செய்யப்போகிறேன், ஆனால் இப்போது இல்லை, அதுபற்றி யோசிக்கவில்லை.. என எத்தனை பேரிடம் விளக்கம் சொல்வது? என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை தனித்தனியாக வைக்க வேண்டும் என நினைப்பவன் நான்.

    சினிமாகாரர்களுக்கு ஒரு கெட்ட பெயர் உள்ளது. புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டால்கூட மீடியாவில் வந்து சண்டை போடுகிறார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தப்பா பேசுவது என இருக்கிறார்கள். இதனால் எல்லா சினிமாகாரக்ளும் அப்படித்தான் என்ற பெயர் இருக்கிறது. நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் விடமாட்டேன் என்கிறார்கள். நான் எதாவது செய்தால் அதை வெளிப்படையாக செய்பவன். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து உங்கள் ஆசீர்வாதத்துடன்தான பண்ணுவேன். திருட்டுத்தனமாக எதுவும் செய்வதில்லை' என்றார் பப்லு.

    • இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல்.
    • இந்த படத்தின் புதிய பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

     இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

    காபி வித் காதல்

    இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    காபி வித் காதல்

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் 'மாற்றம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. பா.விஜய் வரிகளில் இன்னோ ஜென்கா பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    காபி வித் காதல்

    காபி வித் காதல் திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன்.
    • இவர் தி சான்ட்மேன்: ஆக்ட் 3 ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது 'என்பிகே 107', 'சலார்' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    ஸ்ருதிஹாசன்

    இந்நிலையில், ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குனர் இயக்கும் 'தி ஐ' என்ற படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது. இந்த மாத இறுதியில் 'தி ஐ' படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த படம் தொடர்பாக ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், " தி ஐ படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என பதிவிட்டுள்ளார். 


    • பாலிவுட் நடிகை கங்கனா தற்போது எமர்ஜென்சி படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் அடுத்ததாக நாடக நடிகை பினோதினி வாழ்க்கை கதையில் நடிக்கவுள்ளார்.

    பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் சமீப காலமாக பயோபிக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான `தலைவி', `மணிகர்ணிகா' போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவிய `எமர்ஜென்சி' எனும் படத்தில் நடித்துள்ளார்.


    கங்கனா ரணாவத் 

    இந்நிலையில் தற்போது பெங்காலி நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நாடக நடிகையான பினோதினியின் வாழ்க்கை கதையில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பரிணிதா, மர்தாணி போன்ற படங்களை இயக்கிய பிரதீப் சர்க்கார் இயக்கவுள்ளார்.


    கங்கனா ரணாவத் 

    இந்த படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் கூறியதாவது, "நாடு போற்றும் பெருமை பெற்ற பினோதினி பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் பிரதீப் சர்க்கார் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

    ×