என் மலர்
சினிமா செய்திகள்

ஸ்ருதிஹாசன்
ஹாலிவுட்டை கலக்க தயாரான ஸ்ருதிஹாசன்.. குவியும் வாழ்த்து..
- தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன்.
- இவர் தி சான்ட்மேன்: ஆக்ட் 3 ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது 'என்பிகே 107', 'சலார்' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஸ்ருதிஹாசன்
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குனர் இயக்கும் 'தி ஐ' என்ற படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது. இந்த மாத இறுதியில் 'தி ஐ' படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் தொடர்பாக ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், " தி ஐ படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.






