ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘நானே வருவேன்’.இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ்
தனுஷ்
Published on

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நானே வருவேன்

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நானே வருவேன் போஸ்டர்

அதன்படி, இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி தளம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com