மனிதருக்கான கண்ணியத்தை அவருக்கு கொடுக்க வேண்டும்.. குழப்பத்தில் பிக்பாஸ் வீடு..

பிக்பாஸ் தமிழ் சீசன்-6 சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் தினம் தினம் ஒரு பிரச்சனைகள் வெடிக்கின்றது.
பிக்பாஸ் சீசன் -6
பிக்பாஸ் சீசன் -6
Published on

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தினம் தோறும் ஒவ்வொரு பிரச்சனையுடன் புரோமோக்கள் வெளியாகிறது.

இந்நிலையில் 13-வது நாளான இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் அசீமை அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முன் சில சிவப்பு கார்டுகள் இருக்கின்றனர். இந்த கார்டுக்கு தகுதியானவர் இந்த வீட்டில் யார் என்பதை தேர்ந்தெடுங்கள் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் கூறுகிறார்.

அப்போது முதலில் வந்த விக்ரமன் சிவப்பு கார்டை அசீமிற்கு கொடுத்துவிட்டு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கண்ணியம் இருக்கு. அந்த கண்ணியத்தை அந்த மனிதருக்கு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று கூறுகிறார். தொடர்ந்து பலரும் ரெட் கார்டை அசீமிற்கு பல காரணங்களுக்காக கொடுக்கின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது.

இதற்கு முந்தைய நாளில் விக்ரமனை அசீம் ஒருமையில் வாடா போடா என்று பேசியதன் மூலம் பிக்பாஸ் வீட்டினுள் பூகம்பம் வெடித்தது. இதன் வெளிப்பாடாகவே தற்போது வெளியாகியுள்ளது புரோமோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com