என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் இந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
    X

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    மீண்டும் இந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

    • ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
    • தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×