என் மலர்
சினிமா செய்திகள்
- அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

லத்தி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். இதில் நடிகர் விஷால் பேசியதாவது, இது விஷாலின் திரைப்படம் அல்ல. இது யுவன் சங்கர் ராஜாவின் திரைப்படம், அதற்கு அடுத்து சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் திரைப்படம். அதற்குப் பிறகு என்னுடைய திரைப்படம்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
நீங்கள் எல்லாம் என்ன கேட்பீர்கள் என தெரியும். ஆனால் அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். லோகேஷ் கனகராஜை பார்த்து சந்தோசமாகவும் இருக்கிறது, அதேசமயம் பொறாமையவும் இருக்கிறது. உங்களை போலவே நடிகர் விஜய் வைத்து கடவுள் புண்ணியத்தில் ஒரு நல்ல கதையை நானும் இயக்குவேன் என நம்புகிறேன் என்றார்.

விஜய்
விஷால் பேசிக்கொண்டு இருக்கையில் கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் புரட்சி தளபதி என்று கத்தினார். அதற்கு இல்லை இல்லை, தளபதி என்றால் அவர்தான். நான் புரட்சி தளபதி இல்லை, என் பெயர் விஷால் மட்டுமே. என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன்.
- இவரது இளையமகள் ஹரிதா- ஆதர்ஷன் நயினார் திருமணம் நேற்று நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன். தற்போது இவர் நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் மற்றும் காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் சார்பில் தயாரித்து வருகிறார். இவரது மூத்த மகள் ரேவதி - அபிஷேக் குமாரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் திரைத்துறையைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா
இந்நிலையில், இவரது இளையமகள் ஹரிதா- ஆதர்ஷன் நயினார் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த நடிகரும், சிறந்த பேச்சாளருமான சிவகுமார் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமகன் ஆதர்ஷனுக்கு தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா
இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னணி தயாரிப்பாளர்களான, கலைப்புலி. எஸ்.தாணு, எஸ்.ஏ. சந்திரசேகரன், டி.ஜி. தியாகராஜன், முரளி ராமநாராயணன், பிரமிட் நடராஜன், டி. சிவா, கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்.ஆர் பிரபு, பி.எல்.தேனப்பன், கே.எஸ். ஸ்ரீனிவாசன், கே.எஸ். சிவராமன், ஏ.எல். அழகப்பன், லலித்குமார், சித்ரா லக்ஷ்மணன், ஜே.எஸ்.கே சதீஷ் குமார், கமல்போஹ்ரா, பி. பிரதீப், ராஜ் நாராயண், பி.ஜி. முத்தையா, கார்த்திகேயன், சமீர் பரத், அருண்மொழி மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா
மேலும், இயக்குநர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர்.பார்த்திபன், சேரன், லிங்குசாமி, ஏ.எல். விஜய், எழில், சசி, திரு, பாண்டிராஜ், சிம்புதேவன், அறிவழகன், சி.எஸ். அமுதன், கருணாகரன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாலாஜி குமார், கிருஷ்ணா, கௌரவ் நாராயணன், ஆர்.கண்ணன், ஜெகன், ஹரிகுமார், ராஜ்தீப் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா
இவர்களுடன் முன்னணி நடிகர்கள் கௌதம் கார்த்திக், சிபி சத்யராஜ், ஜி.வி. பிரகாஷ்குமார், தியாகராஜன், பிரசாந்த், பஞ்சு சுப்பு, கவிதாலயா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சித்தார்த்தா சங்கர், ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் 'திருப்பூர்' சுப்ரமணியம், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, சினேகன், இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன், 'குக்கு வித் கோமாளி' டைட்டில் வின்னர் கார்த்திகா கனி, யூடியூபர் இட்ஸ் பிரஷாந்த், ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி, 'சரிகம' ஆனந்த் மற்றும் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா
இந்த திருமணம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 'திரையுலக நண்பர்கள் மற்றும் என் நலன் விரும்பிகள் என திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இந்த நிகழ்வை பிரம்மாண்டமாகவும் மகிழ்ச்சியான நினைவாகவும் எங்கள் குடும்பத்திற்கு மாற்றிக் கொடுத்த திரு. சிவகுமார் அவர்களுக்கும் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரண்டு மகள்களின் திருமணத்திற்கும் உங்களது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளீர்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக நான் இந்த திரையுலகில் இருப்பதற்கான மதிப்புமிக்க மகிழ்ச்சியான தருணமாக இதைப் பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- பிரபல புகைப்பட கலைஞர் எம்.ராம் விக்னேஷின் கைவண்ணத்தில் 'வோயேஜ் எண்ட் யூரோப்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது.
- இந்த காலண்டருக்காக சின்னத்திரை நடிகைகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
பிரபல புகைப்பட கலைஞர் எம்.ராம் விக்னேஷின் கைவண்ணத்தில் சின்னத்திரை நடிகைகளை வைத்து 'வோயேஜ் எண்ட் யூரோப்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது. 'வோயேஜ் எண்ட் யூரோப்' எனும் தலைப்பில் இந்த காலண்டர் சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் வெளியிடப்பட்டது.
இதில் சூரிய ஒளி மற்றும் ஐரோப்பிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எம்.ராம் விக்னேஷ் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஹேமா பிந்து, அஷ்வினி சந்திரசேகர், மௌனிகா, பவித்ரா, பிரியங்கா, ஆஷிகா, பாயல், வர்ஷினி வெங்கட், ரியா கணேஷ், அமிஷா, ஸ்ரீ, ரியா ஷர்மா உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் தோன்றும் இந்த காலண்டரில் 12 வகையான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்காக கலை இயக்குனர் மணி ஐரோப்பிய பகுதிகளை செட் அமைத்துள்ளார். ஐரோப்பிய நாகரீகத்தை விக்கி கபூர் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். ஸ்வாதி, நிவேதா, ப்ரீத்தி ஆகியோர் ஒப்பனை செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் காலண்டர் புகைப்படங்களில் இடம்பெற்ற சின்னதிரை நடிகைகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். மேலும் அடுத்த முறை திறந்த வெளியில் வேறொரு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு புதிய திட்டங்களுடன் புகைப்பட காலண்டர் எடுக்க உள்ளதாகவும் எம்.ராம் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
- நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் இன்று மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க இருக்கிறார்.
நடிகர் விஜய் சென்னையில் இன்று ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது.

விஜய்
இதன் அடிப்படையில் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக தங்கள் மன்ற நிர்வாகிகளை மக்கள் பணிகளில் ஈடுபட வைக்க பல்வேறு திட்ட வடிவங்கள் நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பின்பற்றி பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

விஜய்
இந்த நிலையில் இன்று விஜய் மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க இருக்கிறார். இந்த முறை அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப்பேச இருக்கிறார். இதற்காகக் காலையிலிருந்தே பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமையகத்தில் ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். அனைவருக்கும் மதிய உணவாகச் சூடான பிரியாணி சமைக்க அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம்போல் பிற்பகலில் விஜய் நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார். கடந்த முறை பனையூர் பிரியாணி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
- ரஜினி தனது 73-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
- இந்த ஆண்டு தனது பேரன்களோடு நேரம் செலவழித்து ரஜினி கொண்டாடியிருக்கிறார்.
ரஜினிகாந்த் 73-வது பிறந்த நாளை நேற்று தனது பேரன்களோடு கொண்டாடியிருக்கிறார். பிறந்த நாளின் போது ரஜினியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன் குவித்திருந்தனர். அதிகாலை முதலே திரண்ட ரசிகர்கள் ரஜினி வீட்டின் வெளியே வந்து கையசைப்பார் என்று காத்திருந்த நிலையில் வீட்டிலிருந்து லதா ரஜினிகாந்த் வந்து சார் ஊரில் இல்லை. அதனால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

பேரன்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி
ஆனால் அவர் நேற்று முழுவதும் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி தனுஷ்-ஐஷ்வர்யாவின் மகன்களான லிங்கா, யாத்ராவுடன் பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனுஷின் மகன் லிங்கா கையில் காயம் ஏற்பட்டு கட்டு போட்டப்பட்டிருந்தது. இதனால் தனுஷின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மழை, புயல் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து தன்னை சந்திக்க வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகச் கூறப்ப்படுகிறது.
Cannot capture something more beautiful..Cannot caption some such bonds ..My birthday boy with my boys ! #grandfatherlove❤️ #grandsonsrock💙 pic.twitter.com/iCWLZ6b6n7
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) December 12, 2022
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர்
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ஆர்.ஆர்.ஆர்
இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. இந்த விழா 2023-ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், விஷால் நடித்துள்ள லத்தி பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
- இதில் லோகேஷ் கனகராஜுக்கு பேசியது வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, ஆக்ஷன் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு திரைப்படத்திற்கு 148 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், எந்த அளவிற்கு உழைப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என எனக்கு தெரியும். எனவே, வரும் 22ஆம் தேதி வெளியாகும் லத்தி திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
- 'செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளனர்.
'செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, 'தலைவாசல்' விஜய், கீதா கைலாசம், 'பிளாக் ஷீப்' நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். முதல்முறையாக ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பாரர்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறதாக படக்குழு அறிவித்துள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார்.
- இதுகுறித்து அவர் தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ரம்மி விளையாட்டு விளம்பத்திரத்தில் நடித்திருந்தது பல விவாதத்தை கிளப்பியது. அவர் சூதாட்டத்தை ஆதரிப்பதாகவும் இதனால் பல குடும்பங்களில் வாழ்கை சீரழியும் அவலம் உள்ளது எனவும் பலரும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

சரத்குமார் நடித்த ரம்மி விளம்பர காட்சி
இந்நிலையில் இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன் ஆனால், யாரும் ஓட்டுப் போடுவதில்லை; சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள் என காட்டமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
- அவரை கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவரை கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு, கோ-பூஜை, கஜபூஜை செய்து வைக்கப்பட்டது.

சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அவரை காண கோவிலில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் விஷாலை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடத்தினர்.
- நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தக் காரணம் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 67-வது படம். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலை அணுகி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று விஷால் கூறியுள்ளார்.

விஷால்
இதுகுறித்து விஷால் அளித்துள்ள பேட்டியில், ''இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை சந்தித்து விஜய் படத்தில் நடிக்கும்படி கேட்டார். ஆனால் எனக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் விஜய் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் எதிர்காலத்தில் விஜய் படத்தில் நடிப்பேன். எனது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை எடுத்து மக்களிடம் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. துப்பறிவாளன் 2 படத்தில் நடித்த பிறகு விஜய்யை சந்தித்து கதை சொல்லி நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்'' என்றார்.
- நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்தனர்.

ரஜினி - சிவகார்த்திகேயன்
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க... என்றும் உங்கள் ரசிகன் என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.






