தளபதி என்றால் அது விஜய் மட்டும்தான்! நடிகர் விஷால் அதிரடி

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விஷால்
விஷால்
Published on: 

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

லத்தி
லத்தி

லத்தி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். இதில் நடிகர் விஷால் பேசியதாவது, இது விஷாலின் திரைப்படம் அல்ல. இது யுவன் சங்கர் ராஜாவின் திரைப்படம், அதற்கு அடுத்து சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் திரைப்படம். அதற்குப் பிறகு என்னுடைய திரைப்படம்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

நீங்கள் எல்லாம் என்ன கேட்பீர்கள் என தெரியும். ஆனால் அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். லோகேஷ் கனகராஜை பார்த்து சந்தோசமாகவும் இருக்கிறது, அதேசமயம் பொறாமையவும் இருக்கிறது. உங்களை போலவே நடிகர் விஜய் வைத்து கடவுள் புண்ணியத்தில் ஒரு நல்ல கதையை நானும் இயக்குவேன் என நம்புகிறேன் என்றார்.

விஜய்
விஜய்

விஜய்

விஷால் பேசிக்கொண்டு இருக்கையில் கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் புரட்சி தளபதி என்று கத்தினார். அதற்கு இல்லை இல்லை, தளபதி என்றால் அவர்தான். நான் புரட்சி தளபதி இல்லை, என் பெயர் விஷால் மட்டுமே. என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com