என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


    உதயநிதி ஸ்டாலின்

    இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான  கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    கமல்ஹாசன்

    அதில், "வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


    உதயநிதி ஸ்டாலின்

    இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்." என்று கூறினார்.


    உதயநிதி ஸ்டாலின்

    பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
    • இவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ராஜமவுலி

    மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பலரும் ராஜமவுலிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி பாலிவுட்டின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.


    ராஜமவுலி

    அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்து நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அதிக சம்பளம் தருவதினால் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன.

    பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு இயக்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையெனில் மூழ்கிவிடுவார்கள்" என்று பேசியுள்ளார்.

    • இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்து இருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார். மோசடி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீனும் பெற்றார். அந்த ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து பிரபல இந்தி நடிகை நோரா பதேகியும் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பொருட்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் மீது நோரா பதேகி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.


     நோரா பதேகி

    அவர் தாக்கல் செய்த மனுவில், ''என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு சதிசெய்து இந்த வழக்கில் என்னை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்க வைத்து உள்ளார். என்னுடன் நேரடியாக மோத முடியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். மாடலிங் துறையிலும், சினிமாவிலும் எனது வளர்ச்சி பிடிக்காமல் பொய் வழக்கு போட்டு உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

    • துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.


    துணிவு

    இந்நிலையில், இந்த படத்தில் இரண்டாவது பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'காசேதான் கடவுளடா' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள பாடலாசிரியர் வைசாக் ' மணி மணி மணி' என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இப்படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' என்றும் இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


    துணிவு

    மேலும், இந்த பதிவுகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘கிக்’.
    • இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கிக்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    கிக்

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'கண்ணம்மா' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    • நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'லத்தி'.
    • இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். 'லத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விஷால்

    இதையடுத்து நடிகர் விஷால் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். லத்தி படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "மருது படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் பாபா பாஸ்கர் மாஸ்டரிடம் அடிக்கடி கூறுவேன் நான் தனுஷ் கிடையாது. நீங்கள் தனுஷிற்கு கற்றுக் கொடுக்கும் டான்ஸை எனக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள். எனது உயரத்திற்கு நான் கீழே குனிந்து மேலே வருவதற்குள் அடுத்த சரணம் வந்துவிடும் என்று கூறினேன். அதற்கு அவர் நீ கண்டிப்பாக பண்ணுவாய் தயவு செய்து பண்ணு என்று கூறி பொறுமை காத்து என்னை நடனம் ஆட வைத்தார்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.
    • இவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    தி லெஜண்ட்

    இதைத்தொடர்ந்து, பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.


    திறப்பு விழாவில் லெஜண்ட் சரவணன்

    மேலும் அவர் பேசியதாவது, "மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன். நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர்" என்று பேசினார்.

    • விஜய் இன்று மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்தித்தார்.
    • இவர் ரசிகருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய் சென்னையில் இன்று ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது.


     நிர்வாகிகளை சந்தித்த விஜய்

    இந்த நிலையில் இன்று விஜய் மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்தித்தார். இந்த முறை அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இதற்காகக் காலையிலிருந்தே பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமையகத்தில் 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


    விஜய்

    இந்த நிகழ்வின் போது விஜய்யுடன் ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முன்வந்தார். அந்த ரசிகரை தனது கையில் தாங்கியபடி விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் 65-வது நாட்களை நெருங்கியுள்ளது.
    • இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 12 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 65-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இந்த வாரம் சொர்க்கமா.. நரகமா.. என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் சொர்க்கத்தினர், நரகத்தினர் என இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறி கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் எந்த விஷயங்களை மாற்றிக் கொண்டால் தங்களைப் போல சொர்க்கத்தை வந்து சேர முடியும் என்று அறிவுரை கூற வேண்டும் என்று சொர்க்கத்தினருக்கு பிக்பாஸ் வலியுறுத்துகிறார். இதில் தனலட்சுமி கோபத்தை தவிர்த்தால் அவர் கண்டிப்பாக சொர்க்கத்திற்கு வருவார் என்று அமுதவாணன் கூறுகிறார்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதனால் கோபமடைந்த தனலட்சுமி தேவையில்லாத விஷயத்திற்கு கோபப்படுவதை நான் குறைத்திருக்கிறேன். இதற்கு மேல் நான் கோபப்படாமல் இருப்பதற்கு அமுதவாணனாக தான் இருக்க வேண்டும் என்று காட்டமாக கூறுகிறார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    • நடிகர் ரஜினி நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்தனர்.


    ரஜினி 

    இந்நிலையில், ரஜினிக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "12/12-க்குள் பிறந்த நாளை அடங்கிவிடலாம்.ஆனால் வாழ்த்துவது 22,23,24,25,26 ,27,28,29 என 100 வரை தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.அவரது இடத்தை நெருங்கலாம்,தொடலாம் தாண்டலாம் ஆனால் அவரது தன்னடக்கத்தை,தன்னைத்தாழ்த்தி கொண்டு,தகுதியுள்ளோரை வாழ்த்தும் தனித்தன்மையை யாரும் தொடக்கூட முடியாது.


    பார்த்திபன் - ரஜினி

    ரஜினி சாரை ரசிப்பவர்கள் (ஜப்பான் உட்பட)பல கோடி இருக்கலாம் ஆனால்,அவரே ரசிகராக மாறும்போதும், அடுத்தவரின் படைப்பை பாராட்டும் போதும் குழந்தையாக மாறி குதூகலமாகிவிடுவதில் அவருக்கு இணை அவரே. சிம்ம ராசி, மகர லக்னம், திருவோண நட்சத்திரம் என்பது அவரின் ஜாதகம்.ஆனால் சினிமா ராசி, ரசிக luckனம், திரையுலக உச்ச நட்சத்திரம் என்பதே அவருக்கு சாதகம்!!! வாழ்த்துகள் - நேற்று ஒருநாள் மட்டுமல்ல!" என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


    பிச்சைக்காரன்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிச்சைக்காரன் -2 படக்குழு

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை அனுமதி பெறாமல் ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி 'பிச்சைக்காரன் -2' படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×