இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி..

உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்." என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com