என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் பாரதிராஜா தற்போது தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்து வந்தார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் பாரதிராஜா இணைந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் "மேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதனிடையே இயக்குனர் பாரதிராஜாக்கு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இந்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

     

    மேகங்கள் கலைகின்றன

    மேகங்கள் கலைகின்றன

    இந்நிலையில், 2 மாத இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் தங்கர் பச்சான் கூறியதாவது, படபிடிப்பில் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து 'கருமேகங்கள் கலைகின்றன' எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன்.

     

    மேகங்கள் கலைகின்றன

    மேகங்கள் கலைகின்றன

    பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜா அவர்களின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம்! உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு!! என்று பகிர்ந்துள்ளார்.

    • பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா படங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

    தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் வெளிநாட்டு விருது வாங்குவதிலும் அதிகம் காணப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்கள் தற்போது இந்திய பொழுதுபோக்கு சந்தையை ஆளுகின்றன. சமீபத்தில், ஐஎம்டிபி 2022 ஆம் ஆண்டின் முதல் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது, இதில் ஒரே ஒரு பாலிவுட் படம் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

    விக்ரம்

     

    எஸ்.எஸ்.ராஜமவுலியின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படமான 'ஆர்ஆர்ஆர்' முதலிடத்தைப் பிடித்து உள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பின்வருமாறு:-

    1. ஆர்.ஆர்.ஆர்

    2. தி காஷ்மீர் பைல்ஸ்

    3. கே.ஜி.எப்-2

    4. விக்ரம்

    5. காந்தார

    6. ராக்கெட்ரி: நம்பி விளைவு

    7. மேஜர்

    8. சீதா ராமம்

    9. பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று

    10. 777 சார்லி

    ஆர்ஆர்ஆர் படம் மார்ச் மாத தொடக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியானது, முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி. ஆர்ஆர்ஆர் கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்று உள்ளது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவதை படம் காட்டுகிறது.

    • பதான் படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • பேஷ்ரம் ரங் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

    போபால்:

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்த படத்தின் முதல் பாடல் 'பேஷ்ரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூக வலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீச்சல் உடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

    மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடல் காட்சியின் காஸ்ட்யூமுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். #BoycottPathan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    • சுந்தர். சி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தலைநகரம் -2’.
    • இந்த திரைப்படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.

    'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

     

    தலைநகரம்-2

    தலைநகரம்-2

    அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.

     

    தலைநகரம்-2

    தலைநகரம்-2

    இப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.



    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான அமீர் தற்போது நடித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான அமீர் தற்போது நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். சிம்புவின் மாநாடு படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

    இதில் கதாநாயகியாக சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

    அமீர்

    அமீர்

     

    இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசும்போது, "தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் எனிடம் பேசாமல் இருந்தார்.

    நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

    ஆனந்த்ராஜ வில்லனாக நடித்து பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை.

    உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை. பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்" என்று கூறினார்

    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தனுசிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இப்போதெல்லாம் முன்னணி கதாநாயகர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகவோ, சில நிமிடங்கள் வந்துபோகும்படியான கவுரவத் தோற்றத்திலே நடிக்க சம்மதம் சொல்கிறார்கள். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கிளைமாக்சில் வில்லனாக வந்து மிரட்டினார். ஷாருக்கானின் இந்தி படத்தில் விஜய் கவுரவ தோற்றத்தில் வருகிறார். விஜய்சேதுபதி பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

     

    தனுஷ்

    தனுஷ்

    லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க விஷாலை அணுகினர். அவருக்கு விருப்பம் இருந்தாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் இயலாது என்று மறுத்து விட்டார். அவருக்கு பதில் அர்ஜுன் வில்லனாக வருகிறார்.

    இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க தனுசிடம் பேசி வருவதாகவும் தனுசும் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

    • நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

    வால்டர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    வால்டர் வீரய்யா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பாஸ் பார்ட்டி' பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • 'பதான்' படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    இந்த பாடலில் தீபிகா நீச்சலுடையில், கவர்ச்சியாக நடித்து உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீது எதிர்மறையான கருத்துகளும் வருகின்றன. பலர் இந்த பாடல் ஆபாசமாக உள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். இதனுடன் பதான் புறக்கணிப்பும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்த படத்திற்காக தீபிகா 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கவர்ச்சி உடையில் நடனமாடுவதற்காக தீபிகா படுகோனே சம்பளத்தை உயர்த்தியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்.

    சமீபத்தில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும் எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், ராஜமவுலிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரபாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ராஜமவுலி - பிரபாஸ்

    அதில், "ராஜமவுலி அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள். சிறந்த இசையமைப்பாளருக்கான எல்.ஏ (LA) பிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்று பதிவிட்டுள்ளார்.


    ராஜமவுலி - பிரபாஸ் பதிவு

    இதற்கு இயக்குனர் ராஜமவுலி, " தேங்க்யூ டார்லிங். என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள்.." என்று" பதிலளித்துள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

     

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உதயநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-

    அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. இளைஞர் நல துறைக்கு என்ன செய்ய போகிறீர்கள்?

    பதில்: அத்தனை பேரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்கும் போதும், விமர்சனங்கள் வந்தன. கண்டிப்பாக இப்போதும் விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் மீறி எனது செயல்கள் இருக்கும். என் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலமே பதிலடி கொடுப்பேன்.

    சட்டமன்ற உறுப்பினரான போதும் விமர்சனங்கள் எழுந்தன. என்னால் முடிந்த அளவுக்கு தலைவரின் ஆணையை ஏற்று இளைஞர் அணி துணை செயலாளராக மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரது ஒத்துழைப்போடும் பொறுப்பை உணர்ந்து சரிவர பணிகளை செய்வேன்.

    சீனா போன்ற நாடுகளில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

    பதில்: இப்போதுதான் அலுவலகத்துக்கு சென்று முதல் கையெழுத்தை போட உள்ளேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற வேண்டும் என்கிற ஐடியா உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கான பணிகளை தொடங்கி முடுக்கி விடுவதற்கான வேலைகள் நடைபெறும். அமைச்சர் பதவியை இன்னொரு கூடுதல் பொறுப்பாகவே பார்க்கிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் எனது பணிகள் இருக்கும்.

    உங்கள் மீதான எதிர்பார்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: அனைவர் மீதும் எதிர்பார்ப்புகள் உள்ளன. வாரிசு அரசியல் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதற்கெல்லாம் எனது செயல்களே பதிலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பதிலளித்தார்.

    • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


    உதயநிதி ஸ்டாலின்

    இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.



    • நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
    • இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.


    ரெஜினா கசாண்ட்ரா

    இதையடுத்து நடிகை ரெஜினா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்." என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ரெஜினா - சந்தீப் கிஷன்

    இந்த பதிவிற்கு 'இருவருக்கும் எப்போது கல்யாணம்' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். ரெஜினா கசாண்ட்ரா 'மாநகரம்' திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ×