என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்காரகன்’.
- இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அங்காரகன்'. ஜூலியன் மற்றி, ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் திரைக்கதையை எழுதியுள்ளதுடன் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

அங்காரகன்
இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இதில் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அங்காரகன்
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். 'அங்காரகன்' 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஜித், விஜய் திரைப்படங்கள் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இருவரும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.

வாரிசு - துணிவு
இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

வாரிசு - துணிவு
இந்நிலையில், 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது.

வாரிசு படக்குழு
துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தியன் -2
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-௨ படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள். pic.twitter.com/tLbjpw2MjE
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2022
- இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகினிங்.
- இப்படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில், லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் (Lefty Manual Creations) தயாரிப்பில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் "பிகினிங்".ஆசியாவில் முதல்முறையாக 'ஸ்பிலிட் ஸ்கிரீனில்' இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.

பிகினிங்
இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. புதிவிதமாக உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
- இப்பட்ம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' வரும் 16-ந்தேதி (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

அவதார் 2
இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியாகிறது. இந்தியாவில் சமீபத்தில் அவதார் 2 படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'.
- ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்திற்கு 'சப்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படமும் 'ஈரம்' படத்தைப் போல திகில் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது.
Need all your best wishes as we begin this new journey today🙏🏼#SABDHAM - The sound that's never heard!Team #Eeram reunites!@dirarivazhagan @MusicThaman @7GFilmsSiva @Aalpha_frames @Dop_arunbathu @EditorSabu @Manojkennyk @stunnerSAM2 @Viveka_Lyrics @Synccinema pic.twitter.com/rgU5UY43VR
— Aadhi🎭 (@AadhiOfficial) December 14, 2022
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி.
- லத்தி திரைப்படம் வருகிற 22-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி. இப்படத்தின் புரொமோஷனில் ஈடுப்பட்டு வரும் நடிகர் விஷால் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது, நான் நடித்த லத்தி திரைப்படம் வரும் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் ஒரு 2-ம் நிலை காவலராக நடித்துள்ளேன். 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன்.
விவாயிகளுக்கு தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். எங்கள் குழுவினர் சரியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கான உதவியை மேற்கொள்கின்றனர். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் எடுக்க வேண்டும். பிரச்சினைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும்.

விஷால்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது தான் அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் வெறும் உதயாக இருந்தபோதில் இருந்தே எனக்கு தெரியும். நானும் அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்காக சேவை செய்து வருவது அரசியல் தான்.

உதயநிதி
சிறிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது மக்கள் அங்கு செல்வது குறைவாக உள்ளது. சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ளதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம் குறித்து இப்போது முடிவெடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- பிறந்தநாளையோட்டி நடிகர் ரஜினி இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு 8-30 மணி அளவில் திருமலைக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகத்தால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தர்காவில் வழிபாடு செய்த ரஜினி
இன்று காலை ரஜினி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் ரஜினி பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று தர்காவில் வழிப்பட்ட ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ரஜினியின் மகள் ஐஷ்வர்யா உடன் இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- 'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
- தற்போது மீண்டும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீவா இணைந்துள்ளார்.
'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் தயாரிக்கவுள்ளார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

ஜீவா
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் குறித்த அடுத்த அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் ஜீவா இரண்டாவது முறையாக இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இணைந்துள்ளார்.
- அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கிய திருமலை தற்போது மான் வேட்டை படத்தை இயக்கியுள்ளார்.
- மான் வேட்டை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான் வேட்டை. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தை டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, "இயக்குனர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்றார்.

மான் வேட்டை
நடிகர் ரவி மரியா பேசியதாவது, "நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்" என்றார்.
- நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- பிறந்தநாளையோட்டி நடிகர் ரஜினி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு 8-30 மணி அளவில் திருமலைக்கு வந்தார். திருமலைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் ஹரிநாத் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார்.

ரஜினி
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தேவஸ்தானத்திற்கு சொந்தமான டி.எஸ்.ஆர் கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கினார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தரிசனம் முடித்து வந்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். போலீசார் அவர்களை கட்டுபடுத்தினர். ரஜினிகாந்திடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறினார்.
- நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.
- இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வீர சிம்ஹா ரெட்டி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

வீர சிம்ஹா ரெட்டி
இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுகுன சுந்தரி என தொடங்கும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Start dancing to the MASS ENERGETIC beats 🕺💃#SugunaSundari from #VeeraSimhaReddy out now 💥- https://t.co/tZKJgHq8XCNataSimham #NandamuriBalakrishna @megopichand @shrutihaasan @varusarath5 @MusicThaman #RamMiriyala @ramjowrites @Sekharmasteroff @SonyMusicSouth pic.twitter.com/AQnM1Dwseh
— Mythri Movie Makers (@MythriOfficial) December 15, 2022






