என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது செல்வராகன் புதிய படக்கும் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

     

    செல்வராகவன்

    செல்வராகவன்

    இந்நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அதில், "இங்குத் தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து ,எதையாவது பிடித்துக் கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்" என்று குறிப்பிட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது.

    • துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

     

    துணிவு

    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.

     

    துணிவு

    துணிவு

     

    இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவலை இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், துணிவு படத்தில் நடிகர் அஜித்தின் லுக்கில், ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்ததற்கே ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இதன்பின்னர் நாங்கள் வெளியிடவுள்ள புரொமோக்களை பார்த்தால், ரசிகர்கள் என்ன செய்வார்கள் என புதியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன்.
    • தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

    காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதன்பின்னர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை பிடித்தார்.

     

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன்

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன்

    இந்நிலையில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகை ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. '7ஆம் அறிவு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்த தன்யா பாலகிருஷ்ணனை நீண்ட வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டாதாகவும் பேசப்படுகிறது.

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
    • இப்படம் இன்று (டிசம்பர் 16) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


    அவதார் -2

    இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது.


    அவதார் -2

    இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதளப் பக்கதில் அவதார் புகைப்படத்தை பகிர்ந்து, " அசுர உழைப்பு அதிருது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தனுஷ் தனது மகன்களுடன் அவதார்-2 படத்தை பார்த்துள்ளார்.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ்

     

    இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது. இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது.

    அவதார்-2 படம் பார்த்த பிரகாஷ் ராஜ்

    அவதார்-2 படம் பார்த்த பிரகாஷ் ராஜ்

     

    மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் படத்தை பார்த்து ரசித்துள்ளார். இந்நிலையில் தனுஷை தொடர்ந்து அவதார் படத்தை தனது மகனுடன் பார்த்து ரசித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பதான்'.
    • இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர்.

    சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' இந்தி படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

     

    பதான்

    பதான்

    வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடும்பாவியை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோவையும் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

     

    மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, ''தீபிகா படுகோனே காவி உடை அணிந்துள்ளார். அசுத்தமான மனநிலையில் படமாக்கி உள்ளனர். பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளையும் நீக்க வேண்டும். இல்லையேல் படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டிவரும்" என்றார். இதனால் படத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ.
    • இவர் நடிகை பிரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அட்லீ - பிரியா

    இவர் கடந்த 2014- ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    • இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தனுஷ் தனது மகன்களுடன் அவதார்-2 படத்தை பார்த்துள்ளார்.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

     

    அவதார்-2

    அவதார்-2

    இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது. இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது.

     

    அவதார்-2

    அவதார்-2

    மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் அவதார் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

    நடிகர் தனுஷ் இன்று காலை சமூக வலைத்தளப் பக்கத்தில் 'இது அவதார் தினம்' என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’.
    • இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.


    செம்பி

    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


    செம்பி

    'செம்பி' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    மலையாளத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்து வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஓசானா', மற்றும் 'ஒரு முத்தஸி கதா', 'சாராஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப். இவர் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.


    ஜூட் ஆந்தனி ஜோசப்

    இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் மம்முட்டி பேசியதாவது, ''டைரக்டர் ஜூட் ஆந்தனி தலையில் முடி இல்லா விட்டாலும் அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டிரைலர் சிறப்பாக உள்ளது" என்றார்.


    மம்முட்டி

    இதையடுத்து சமூக வலைதளத்தில் ஒரு மூத்த நடிகர், இயக்குனரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பல எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து நடிகர் மம்முட்டி மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இயக்குனர் ஜூட் ஆந்தனி பாராட்டும்போது பேசிய வார்த்தைகளால் சிலர் புண்பட்டு இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    இதற்கு முன்பு இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப், நடிகர் மம்முட்டியை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் என் தலையில் முடி இல்லை என்று எனக்கோ என் குடும்பத்தாருக்கோ வருத்தம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை குஷ்பு தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவரது மூத்த சகோதரர் அபுபக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.


    குஷ்பு

    சமீபத்தில் குஷ்பு தயாரிப்பில் வெளியான 'காபி வித் காதல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் அபுபக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதாககூறிய மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


    குஷ்பு

    இதற்காக குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் திரை உலகினர் குஷ்புவிற்கு ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

    • நடிகை பாவனா தற்போது 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


    பாவனா

    இந்நிலையில் வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரவுவதால் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து பாவனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ''மலையாள திரையுலகில் மீண்டும் நடிக்க வரமாட்டேன் என்று நினைத்தேன். அப்படி வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள்.


    பாவனா

    இணைய தளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் பரவி வருகின்றன. வலைத்தளம் மூலம் மற்றவர்களை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது. பணம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தியும் இதை செய்ய வைக்கிறார்கள். எனது கதாபாத்திரங்கள் வாயிலாக என்னை அறிந்தவர்களும் இதனை செய்தனர். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன்" என்றார்.

    ×