பாலாஜி மோகன்
பாலாஜி மோகன்

பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட தனுஷ் பட இயக்குனர்?

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன்.தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
Published on

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதன்பின்னர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை பிடித்தார்.

பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன்
பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன்

பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன்

இந்நிலையில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகை ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. '7ஆம் அறிவு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்த தன்யா பாலகிருஷ்ணனை நீண்ட வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டாதாகவும் பேசப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com