என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

     

    துணிவு

    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.

     

    துணிவு

    துணிவு

    இப்படத்தின் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'அவதார்-த வே ஆப் வாட்டர்'.
    • புதுவையில் இப்படம் வெளியான திரையரங்கில் ஊழியர்கள் அவதார் வேடம் அணிந்து ரசிகர்களை வரவேற்றனர்.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த திரைப்படம் 'அவதார்'. சயின்ஸ்-பிக்சன் படமான அவதார் உலகின் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகமான 'அவதார்-த வே ஆப் வாட்டர்' கடந்த 16-ந் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான அவதார் 2 தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

     

    அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்

    அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்

    புதுவையிலும் அவதார் திரைப்படம் சில திரையரங்குகளில் வெளியான நிலையில், புதுவை கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரையரங்குக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவதார் போல் வேடம் அணிந்துள்ள தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    • இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’.
    • இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.


    கனெக்ட்

    'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும்.


    கனெக்ட்

    இதையடுத்து இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நான் வரைகிற வானம்' பாடல் வெளியாகியுள்ளது. கதிர் மொழி சுதா வரிகளில் உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • நடிகர் ராஜ்கிரணின் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சீட்டாட்டம்' என்பது மிக, மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள் அதற்கு அடிமையானவர்கள். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் "எல்லாமே என் ராசா தான்" என்று ஒரு படமே எடுத்தேன். அந்த காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது.


    ராஜ்கிரண்

    "காவல்துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே" என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில் காவல் துறையை பற்றிய பயமில்லாமல் எல்லோரும் ஆடலாம் என்றாகி, இந்த சமூக சீர்கேட்டிற்கு பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன. தமிழக அரசு இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டை தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல்படுத்த முடியாமல் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.


    ராஜ்கிரண்

    தன்னிச்சையாக இந்த பிரச்சினையை கையிலெடுத்து, இந்த உயிர்பலி விளையாட்டை தடை செய்து, பொதுமக்களை காக்க வேண்டிய நீதிமன்றங்களே, "இது திறன் மேம்பாட்டு விளையாட்டு என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? இல்லையெனில் இது அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட, மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறுவதாக செய்திகள் வருகின்றன. இது, எதில் போய் முடியுமென்று தெரியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    • சிரிச்சா போச்சு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.
    • இவர் முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று கைது செய்யப்பட்டார்.

    சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் பிரபலம். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாக பேசினார், பின்னர் வனிதாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார்.


    நாஞ்சில் விஜயன்

    இதன் பின் சூர்யா தேவி தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சூர்யா தேவி நானும் நாஞ்சில் விஜயனும் ஏறத்தாழ 6 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம்.

    நடிகை வனிதாவிற்கு எதிராக யூ டியூப்பில் கருத்து பதிவிட்டபோது தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் திடீரென வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் இதுபற்றி கேட்பதற்காக நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் பேசிய அவர் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் எனது மண்டை உடைந்தது என்று சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் மீது புகாரளித்திருந்தார்.


    நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

    இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் விஜயன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல்வேறு சம்மன்கள் அனுப்பட்ட நிலையிலும் நாஞ்சில் விஜயன் முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று அவரை போலீசார் கைது செய்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாரிசு, துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது.


    துணிவு - வாரிசு

    இதைத்தொடர்ந்து 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, "விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என்று கூறினார்.


    துணிவு - வாரிசு

    இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் தில் ராஜு அளித்துள்ள பேட்டியில், "மீடியா முன்னாடி பேச வேண்டும் என்றாலே பதட்டமாகுது. நான் என்ன பேசினாலும் சர்ச்சை ஏற்படுத்திவிடுகிறார்கள். சமீபத்தில் நான் ஒரு சேனலுக்கு 45 நிமிடம் பேட்டி கொடுத்திருந்தேன். ஆனால் அதிலிருந்து ஒரு 20 செகன்டை மட்டும் எடுத்து போடுகிறார்கள். அதற்கு முன்னாடி பின்னாடி என்ன பேசியிருந்தேன் என்று முழுவதும் தெரியாமல் சமூக வலைதளத்தில் வைரல் செய்து விட்டார்கள்.


    தில் ராஜு

    அந்த பேட்டியை முழுவதும் பார்த்திருந்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியும். மீடியாவிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அந்த 20 செகன்ட் வீடியோவை மட்டும் வைத்து முடிவு எடுக்காதீர்கள். ஒருவரை நக்கல் செய்வதிலோ கிண்டல் செய்வதிலோ எனக்கு உடன்பாடில்லை. சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு" என்று பேசினார்.

    • இயக்குனர் யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'.
    • இந்த படத்தில் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


    ஓ மை கோஸ்ட்

    இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.


    ஓ மை கோஸ்ட் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு 'வாரிசு' படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன் என்று கூறினார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    வாரிசு

    சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ அளித்துள்ள பேட்டியில், ''வாரிசு படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன்" என தெரிவித்திருந்தார்.


    வாரிசு

    இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சென்னை,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு ஆகிய பகுதிகளில் 'வாரிசு' திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அஜித் நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகை குஷ்புவின் அண்ணன் உடல் நிலை சரியில்லாத நிலையில் இன்று காலமானார்.
    • இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.


    குஷ்பு

    இவர் சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.


    குஷ்புவின் அண்ணன்

    இந்நிலையில், இன்று குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் காலமானார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள குஷ்பு, "உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.



    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இப்படத்தின் பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' இந்தி படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    பதான்

    சில தினங்களுக்கு முன்பு பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.


    வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும், மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா பதான் படத்தின் பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளை நீக்க வேண்டும். இல்லையேல் படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டிவரும் என்று கூறினார்.


    பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் 'பதான்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தனது சமூக வலைதளத்தில் " காவி உடை அணிந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள்; சில எம்.எல்.ஏக்கள் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்; காவி உடை அணிந்த சாமியார்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அது பரவாயில்லை, ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது தவறா " என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.



    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் அவதார் -2.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' நேற்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது.


    அவதார் -2

    மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அவதார் 2 திரைப்படம் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்துள்ளது. இதனை பலரும் பதிவிறக்கம் செய்து இலவசமாக பார்த்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

    • வடிவேலு மற்றும் சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது.
    • இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படங்களில் இணைந்து நடிப்பதை குறைத்துக் கொண்டனர்.

    தமிழ் திரையுலகில் நடிகர் வடிவேலு, சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப்பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் காம்பினேஷன் காட்சிகள் என்றால் படம் விற்பனை செய்வதற்கும் உதவியாக இருந்தது. இந்த நிலையில் தான் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். 10 வருடங்கள் ஆன பிறகும் இவர்கள் இருவரும் இணைந்த நகைச்சுவைக் காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டப்பட்டு வருகிறது.

     

    வடிவேலு - சிங்க முத்து

    வடிவேலு - சிங்க முத்து

    இது குறித்து சிங்க முத்துவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, "நாங்கள் இரண்டு பேரும் நேரில் உட்கார்ந்து பேசினால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விடும். யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு என் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை சுமத்தினார். இதையெல்லாம் நிரூபிக்க முடிந்ததா? இல்லையே. எல்லாமே பொய். இப்போதும் நான் அவரோடு உட்கார்ந்து பேசத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

    ×