என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில், நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா பேசியதாவது, சிவாஜி அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று நேரம் தவறாமை. இன்றுவரைக்கும் என்னுடைய ஸ்டுடியோவில் என் கார் சரியாக ஏழு மணிக்கு நுழைந்து விடும். ஒரு நாள் நான் தாமதமாக வந்து விட்டேன். என்ன ராசா நீயுமா லேட்டு என்று கேட்டார். இல்லண்ணே நான் சரியாகத்தான் வந்தேன். நீங்க முன்கூட்டியே வந்து விட்டீங்க என்றேன்.

     

    உண்மையில் நான் தாமதமாக வரவில்லை. நான் சரியான நேரத்திற்குத் தான் வந்திருந்தேன். அவர் தான் சீக்கிரம் வந்துவிட்டார். ரிக்கார்டிங்கில் உள்ளே வந்து அவருடைய அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அதையெல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

     

    ஒருமுறை திரையுலகம் சார்பில் சிவாஜிக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக வசூல் செய்யப்பட்டது. இன்று இருக்கும் நடிகர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜியின் பெயர் இருக்கிறது. அவருக்குக் கொடுக்கப்படும் பரிசில் யார் பெயரும் இருக்கக்கூடாது அதற்கு ஆகும் முழு பணத்தையும் நான் கொடுத்துவிடுகிறேன்.

    இளையராஜா

    இளையராஜா

     

    அதனைத் தெரிந்து கொண்ட சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என என்னிடம் தெரிவித்தார். அவருக்கான மரியாதையை இந்த சினிமாவோ, அரசோ செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்து விட்டான் என்றால் அது இளையராஜா ஒருவன் தான். இவ்வாறு அவர் பேசினார்.

    • இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

     

    சூரி

    சூரி

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில்.
    • இப்படத்தில் இடம் பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

    தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்தார்.

     

    பிகில்

    பிகில்

    நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

     

    பிகில்

    பிகில்

    இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடிய சிங்கப்பெண்ணே பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் இப்பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.



    • உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா என்று உருவாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
    • விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    தெலுங்கு நடிகர் வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்ய அந்த படத்தில் வில்லனாக நடித்து நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.

     

    உப்பெனா

    உப்பெனா

    இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா என்று உருவாக்கப்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

     

    உப்பெனா - விஜய் சேதுபதி

    உப்பெனா - விஜய் சேதுபதி

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம், உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தரப்பு விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

    • நடிகையும், சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ரோஜா.
    • மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறினார்.

    சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

     

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

     

    இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

     

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

    அப்போது ரோஜா பேசியதாவது, ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனை கண்டு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் நேற்று அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதின.
    • இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நேற்று இரவு நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

     

    மம்முட்டி - மோகன்லால்

    மம்முட்டி - மோகன்லால்

    அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது தொடர்பன புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு படத்தின் புரொமோஷன் பணிகள்

    வாரிசு படத்தின் புரொமோஷன் பணிகள்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

     

    வாரிசு

    வாரிசு

    வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு டைட்டில் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை படக்குழு கவர்ந்துள்ளது. இந்த டைட்டில் போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

    ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

     

    ஆர்.ஜே.பாலாஜி

    ஆர்.ஜே.பாலாஜி

    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்-நடிகைகள் நடித்துள்ளனர். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாடி, மீசையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ராங்கி.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு 'ராங்கி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் 'ராங்கி'. இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.

     

    ராங்கி

    ராங்கி

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சரவணன் கூறும்போது, ''முந்தைய சில படங்களில் இருந்த வார்த்தைகளையே ராங்கி படத்திலும் பயன்படுத்தினோம். ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையில் சர்வதேச குழுக்கள் தொடர்பு இருப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தோம். இதனால் வெளிநாடுகள் சம்பந்தமான காட்சிகள் இருந்தன. அந்த பெயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால் படம் வெளியாவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு விட்டது" என்றார்.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 3 வருடங்களுக்கு பிறகு இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்து, வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.

     

    அவதார் தி வே ஆப் வாட்டர்

    அவதார் தி வே ஆப் வாட்டர்

    3 ஆஸ்கார் விருதுகளை வென்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் நேற்று முன் தினம் வெளியானது.

     

    அவதார் தி வே ஆப் வாட்டர்

    அவதார் தி வே ஆப் வாட்டர்

    இந்நிலையில் இந்தியாவில் 'அவதார் 2' திரைப்படம் முதல் நாளில் ரூ.41 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. மேலும், 'அவெஞ்சர்ஸ்' படத்திற்கு பின் இந்தியாவில் பெரிய ஓபனர் என்ற இடத்தையும் 'அவதார் 2' பிடித்ததுள்ளது.

    • துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

     

    துணிவு

    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.

     

    துணிவு

    துணிவு

    இப்படத்தின் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், அறிவித்தபடி சரியாக காசேதன் கடவுளடா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இந்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

     

    வால்டர் வீரய்யா

    வால்டர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    வால்டர் வீரய்யா

    வால்டர் வீரய்யா

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்ற பாடல் நாளை (19.12.2022)அன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×