என் மலர்
சினிமா செய்திகள்
- வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
- ரஞ்சிதமே பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரஞ்சிதமே
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

ரஞ்சிதமே
இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Ranjithame crosses 100M+ views now ❤️Humongous love everywhere 😍📽️ https://t.co/Q56reRvcvc🎵 https://t.co/gYr0tlcMmD#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani #Varisu #VarisuPongal #RanjithameHits100M pic.twitter.com/TVvguolq7X
— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022
- விஜய் ஆண்டனி தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிச்சைக்காரன்
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிச்சைக்காரன் -2 படக்குழு
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???" என்று பதிவிட்டு இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???
— vijayantony (@vijayantony) December 20, 2022
మీరు అతన్ని కేవలం మరో బిచ్చగాడు అనుకుంటున్నారా???
Today Evening 5pm💣#Pichaikkaran2 #Bichagadu2 #ANTIBIKILI 👺
- தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லீ, நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார்.
தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அட்லீ - பிரியா
இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

அட்லீ - விஜய் - பிரியா
இந்நிலையில் பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
- இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.

லத்தி
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வீரத்துக்கோர் நிறமுண்டு பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா.
- சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் சுதா கொங்கரா சமூக வலைத்தளத்தில் சூர்யா, மணிரத்னம், ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், எனக்குப் பிடித்தவர்களுடன் எனது முதல் காரில் பயணிப்பது மகிழ்ச்சி! என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு
வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்த பாடலின் சிறிய தொகுப்பு அடங்கிய புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’.
- இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

நயன்தாரா
'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
இந்நிலையில் 'கனெக்ட்' படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வினய், ஜி.பி.முத்து மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் வந்து சில மணி நேரத்திற்கு பிறகே, நயன்தாராவின் கார் வந்தது. அதுவரை நயன்தாராவை காண காத்திருந்த ரசிகர்கள் கூட்டத்தால், கார் நகர முடியாமல் நின்றது. அப்போது, காருக்குள் இருந்தவாறு, ரசிகர்களை பார்த்து சிரித்த முகத்துடன் தனது அன்பை நயன்தாரா வெளிப்படுத்தினார். பின்னர், காரில் இருந்து அவர் இறங்கியதும், ரசிகர்கள் சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பதான்.
- ‘பதான்’ தேச பக்தி படம் என பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' இந்தி படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ வெளியாகி இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

பதான்
ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடந்தது. பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்க வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா வற்புறுத்தி உள்ளார். படத்தில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதான் படம் திரையிடப்படும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று அயோத்தி அனுமன் காரி அமைப்பு எச்சரித்து உள்ளது.

பதான் படத்திற்கு எதிர்ப்புகள்
இந்நிலையில் பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ''பதான் என்ன மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேச பக்தி படம். சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்" என்றார்.
- மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
- ஜான்வி கபூர் தற்போது அரசியல் பிரமுகரின் பேரனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி, இந்தி பட உலகிலும் வெற்றி கொடி நாட்டினார். இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கும் சென்று வந்துள்ளனர். காதலை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு
வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) என்ற பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சிரஞ்சீவியின் 154-வது படமான 'வால்டேர் வீரய்யா' படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
- இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டர் வீரய்யா
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வால்டர் வீரய்யா
இப்படத்தின் இரண்டாம் பாடலான ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்ற பாடல் இன்று (19.12.2022) அன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் ஸ்ரீதேவி சிரஞ்சீவி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'தங்கலான்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான்
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

விக்ரம்
இந்நிலையில் நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






