கணவருடன் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த நயன்தாரா

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’.இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
Published on

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

நயன்தாரா
நயன்தாரா

நயன்தாரா

'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இந்நிலையில் 'கனெக்ட்' படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வினய், ஜி.பி.முத்து மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் வந்து சில மணி நேரத்திற்கு பிறகே, நயன்தாராவின் கார் வந்தது. அதுவரை நயன்தாராவை காண காத்திருந்த ரசிகர்கள் கூட்டத்தால், கார் நகர முடியாமல் நின்றது. அப்போது, காருக்குள் இருந்தவாறு, ரசிகர்களை பார்த்து சிரித்த முகத்துடன் தனது அன்பை நயன்தாரா வெளிப்படுத்தினார். பின்னர், காரில் இருந்து அவர் இறங்கியதும், ரசிகர்கள் சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com