முன்னாள் முதல்வரின் பேரனுடன் ஜான்வி கபூர் காதல்?

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.ஜான்வி கபூர் தற்போது அரசியல் பிரமுகரின் பேரனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி, இந்தி பட உலகிலும் வெற்றி கொடி நாட்டினார். இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கும் சென்று வந்துள்ளனர். காதலை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com