நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கனெக்ட்
கனெக்ட்
Published on: 

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

கனெக்ட்

'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும்.

கனெக்ட்

இதையடுத்து இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நான் வரைகிற வானம்' பாடல் வெளியாகியுள்ளது. கதிர் மொழி சுதா வரிகளில் உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com