சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது

சிரிச்சா போச்சு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.இவர் முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று கைது செய்யப்பட்டார்.
நாஞ்சில் விஜயன்
நாஞ்சில் விஜயன்
Published on

சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் பிரபலம். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாக பேசினார், பின்னர் வனிதாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார்.

நாஞ்சில் விஜயன்

இதன் பின் சூர்யா தேவி தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சூர்யா தேவி நானும் நாஞ்சில் விஜயனும் ஏறத்தாழ 6 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம்.

நடிகை வனிதாவிற்கு எதிராக யூ டியூப்பில் கருத்து பதிவிட்டபோது தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் திடீரென வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் இதுபற்றி கேட்பதற்காக நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் பேசிய அவர் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் எனது மண்டை உடைந்தது என்று சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் மீது புகாரளித்திருந்தார்.

நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் விஜயன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல்வேறு சம்மன்கள் அனுப்பட்ட நிலையிலும் நாஞ்சில் விஜயன் முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று அவரை போலீசார் கைது செய்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com