அவதார் கதாபாத்திரங்களாக மாறிய திரையரங்க பெண் ஊழியர்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'அவதார்-த வே ஆப் வாட்டர்'.புதுவையில் இப்படம் வெளியான திரையரங்கில் ஊழியர்கள் அவதார் வேடம் அணிந்து ரசிகர்களை வரவேற்றனர்.
அவதார்
அவதார்
Published on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த திரைப்படம் 'அவதார்'. சயின்ஸ்-பிக்சன் படமான அவதார் உலகின் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகமான 'அவதார்-த வே ஆப் வாட்டர்' கடந்த 16-ந் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான அவதார் 2 தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்
அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்

அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்

புதுவையிலும் அவதார் திரைப்படம் சில திரையரங்குகளில் வெளியான நிலையில், புதுவை கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரையரங்குக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவதார் போல் வேடம் அணிந்துள்ள தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com