செம்பி பட இரண்டாவது டிரைலர் வெளியிட்ட நடிகர் தனுஷ்..

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம்பி’. இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
செம்பி
செம்பி
Published on

2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.

செம்பி

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

செம்பி

'செம்பி' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com