இயக்குனர் அட்லீ வீட்டில் விஷேசம்.. குவியும் வாழ்த்து..

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் நடிகை பிரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அட்லீ - பிரியா
அட்லீ - பிரியா
Published on

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அட்லீ - பிரியா

இவர் கடந்த 2014- ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com