புதுவிதமாக உருவாகியுள்ள பிகினிங் திரைப்படம்

இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகினிங்.இப்படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிகினிங்
பிகினிங்
Published on

இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில், லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் (Lefty Manual Creations) தயாரிப்பில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் "பிகினிங்".ஆசியாவில் முதல்முறையாக 'ஸ்பிலிட் ஸ்கிரீனில்' இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.

பிகினிங்
பிகினிங்

பிகினிங்

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. புதிவிதமாக உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com