ரெஜினாவை இந்த நடிகரா காதலிக்கிறார்..? வாழ்த்தால் வெடித்த சர்ச்சை..

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா கசாண்ட்ரா
Published on

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.

ரெஜினா கசாண்ட்ரா

இதையடுத்து நடிகை ரெஜினா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்." என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ரெஜினா - சந்தீப் கிஷன்

இந்த பதிவிற்கு 'இருவருக்கும் எப்போது கல்யாணம்' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். ரெஜினா கசாண்ட்ரா 'மாநகரம்' திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com