மீண்டும் தங்கர் பச்சான் படப்பிடிப்பில் இணைந்த பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா தற்போது தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்து வந்தார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் பாரதிராஜா இணைந்துள்ளார்.
பாரதிராஜா 
பாரதிராஜா 
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் "மேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதனிடையே இயக்குனர் பாரதிராஜாக்கு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இந்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

மேகங்கள் கலைகின்றன
மேகங்கள் கலைகின்றன

மேகங்கள் கலைகின்றன

இந்நிலையில், 2 மாத இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் தங்கர் பச்சான் கூறியதாவது, படபிடிப்பில் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து 'கருமேகங்கள் கலைகின்றன' எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன்.

மேகங்கள் கலைகின்றன
மேகங்கள் கலைகின்றன

மேகங்கள் கலைகின்றன

பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜா அவர்களின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம்! உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு!! என்று பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com