என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடித்து வந்தார்.
    • இந்த படத்தில் சூர்யா கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இதிலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாகவும் ஆனாலும் 'வணங்கான்' திரைப்படத்தின் பணிகள் தொடரும் என்றும் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

     

    அருண் விஜய்

    அருண் விஜய்

    இதனைத் தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவாது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்டது. பிறகு அதர்வா இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அருண் விஜய்யை நடிக்க வைக்க பாலா பரிசீலிப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது. இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் இதன் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ’வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' போன்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.


    வாரிசு

    'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவிற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    மேடை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்த்த தமன்

    இதனை இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தமனுடன், அனிருத் இருக்கும் புகைப்படங்களை தமன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    • நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நயன்தாரா பேட்டியளித்திருந்தார்.

    நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் புரொமோஷனுக்கா தாரா பேட்டியளித்திருந்தார். அதில், சமீபத்தில் ஒரு நடிகையின் பேட்டியை பார்த்தேன், என் பெயரை சொல்லவில்லை. ஆனால் என்னைப்பற்றி தான் சொல்லி இருந்தார். ஒரு ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக் என அப்படியே பஃல் மேக்கப்பில் இருந்தாங்க, எப்படி ஒரு ஹாஸ்பிடல் சீன்ல இப்படி நடிச்சாங்க என்று தெரியவில்லை என்று சொல்லி இருந்தாங்க.

    நயன்தாரா

    நயன்தாரா

     

    அதற்காக ஹாஸ்பிடல் சீனில் தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. கமர்ஷியல் பிலிம், ரியலிஸ்டிக் பிலிம்னு இருக்கு. ரியலிஸ்டிக் பிலிம்ல அதற்கு ஏற்றமாதிரி அனைத்தும் கவனத்துடன் செயப்படும். ஆனால், அவங்க சொன்னது கமர்ஷியல் பிலிம்பில் பற்றிதான். அந்த சீனுக்கு நான் சோகமாகத்தான் மேக்கப் போட்டுக்கொண்டு போனேன், ஆனால் என் இயக்குனர் எதுக்கு இவ்வளவு சோகம் தேவையில்லை என்றார். ஏன் என்றால் அது கமர்ஷியல் பிலிம் என்று நயன்தாரா பேசினார்.

    மாளவிகா மோகனன்

    மாளவிகா மோகனன்

     

    நயன்தாராவை கேலி செய்த நடிகை பேசிய வீடியோவை ரசிகர்கள் தேடி கண்டு பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தான் நயன்தாராவை இதுப்போன்று கேலி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் 'பதான்'.
    • இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    பதான்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அடுத்த பாடலான 'ஜூம் பூம் தூம்' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஷாருக்கான் 'பார்ட்டி ஆரம்பிக்கலாமா?' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    பதான்

    'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும் எல்.ஏ (LA) பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

     

    ஆர்.ஆர்.ஆர்

    ஆர்.ஆர்.ஆர்

    இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு பட்டியலில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த படக்குழுவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

     

    ஆர்.ஆர்.ஆர்

    ஆர்.ஆர்.ஆர்

    ஆர்.ஆர்.ஆர். சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

    தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது.

     

    கேப்டன் மில்லர்

    கேப்டன் மில்லர்

    அடுத்து தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார்.

     

    ரசிகரின் பதிவு

    ரசிகரின் பதிவு

    இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேப்டன் மில்லர் திரைப்படம் சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு தளத்தில் வெளி நபர்களை அனுமதிக்கப்படவில்லை, புகைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சில புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட இயக்குனர் அருண் மாதேஸ்வரன், அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இது எப்போ என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து அவர் பதிவிட்டிருப்பது வதந்தி என்று பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.

    • தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பூஜா ஹெக்கே.
    • பூஜா ஹெக்டே சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

    தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வந்த சில படங்கள் வருமான ரீதியாக சரிவை சந்தித்தது. ஆனாலும் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. சம்பளத்தோடு சிகை மற்றும் உடை அலங்கார நிபுணர், பாதுகாவலர்கள் என்று தன்னுடன் வரும் 15 முதல் 20 பேருக்கு ஆகும் செலவை தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்பட்டது.

     

    விஜய் - பூஜா ஹெக்கே

    விஜய் - பூஜா ஹெக்கே

    இதனால் வருத்தமான பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், "கதை வலுவாக இருந்தாலும் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்த படத்தில் நான் நடிக்காமல் புறக்கணிக்கிறேன் என்று பரவி உள்ள தகவலில் உண்மை இல்லை. பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்க மாட்டேன். இப்போது உள்ள போட்டி உலகில் வந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது புத்திசாலித்தனம். நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் நடிகைகளுக்கு உள்ளது. சம்பளத்தை முக்கியமாக கருதி கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தாலும் காணாமல் போய்விடுவோம்'' என்றார்.

      பிரபல மாத இதழான 'எம்பயர்' சர்வதேச அளவில் அனைத்துக் காலங்களிலும் சிறந்து விளங்கும் உலகின் 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. திரையுலக ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இதை தயார் செய்து வெளியிட்டு உள்ளனர். இந்தப் பட்டியலில் மர்லின் மன்றோ, மார்லன் பிராண்டோ, டாம் குரூஸ், கேட் வின்ஸ்லெட், ஹீத் லெட்ஜர், லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

      ஷாருக்கான்
      ஷாருக்கான்

       

      இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெயரும் இந்த 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

      ஷாருக்கான்

      ஷாருக்கான்

       

      பாஜி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ஷாருக்கானின் நடிப்பு பயணம் தொடங்கியது 1992-ல் தீவானா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். 'தில்வாலே துல்ஹனியா லெ ஜாயங்கே' காதல் படத்தில் நடித்த பிறகு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து மளமளவென முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

      ஷாருக்கான்

      ஷாருக்கான்

      தற்போது தீபிகா படுகோனேவுடன் நடித்துள்ள 'பதான்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்ற பாடல் காட்சியில் தீபிகா படுகோனே காவி நீச்சல் உடையில் நடித்தது எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இந்த படத்தை தடை செய்ய கோரி போராட்டங்கள் நடக்கின்றன.


      • கோபி நயினார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘மனுசி’.
      • இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

      கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மனுசி'. இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


      மனுசி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

      'அனல் மேலே பனித்துளி' படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மனுசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



      • ஹீரோ படத்திற்காக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பெற்ற ரூ. 5 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ. 6.92 கோடியாக வழங்க கோரி டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
      • ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் நிறுவனம் கூடுதல் மனு தாக்கல் செய்தது.

      சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பெற்ற ரூ. 5 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ. 6.92 கோடியாக வழங்க கோரி 2019-ல் டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பணத்தை திருப்பித் தராததால், ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் நிறுவனம் கூடுதல் மனு தாக்கல் செய்தது.


      சிவகார்த்திகேயன்

      இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்த போது, டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், ப்ரின்ஸ் படத்தில் பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்தும்படி உத்திரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.


      சிவகார்த்திகேயன்

      சிவகார்த்திகேயன் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ப்ரின்ஸ் படத்தில் நடிகர் என்ற முறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்ததாகவும், தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். திரைத்துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடனும், துன்புறுத்தும் வகையிலும் இந்த மனுவை டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.


      சிவகார்த்திகேயன்

      இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, சான்றிதழ்களை ஆராய்ந்த நீதிபதி ப்ரின்ஸ் படத்தின் தயாரிப்பு பணிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்படுவதால், அவரது சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

      • விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
      • இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.

      வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


      வாரிசு

      இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' போன்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.


      வாரிசு

      இந்நிலையில், ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

      • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
      • இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

      ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


      ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த ரோஜா

      இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

      ×