என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சி இன்றுடன் 73-வது நாட்களை நெருங்கியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 73-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் போட்டியாளர்கள் கடந்த கால நினைவுகளை பகிரும் படி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர்ந்து வந்தனர். அப்போது ரக்‌ஷிதா, நான் கடவுள் கிட்ட கேட்டுக்கிறது ஒன்னே ஒன்னு தான. இதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரியாது. குழந்தையோட அமைப்பு இருக்கா என்றும் தெரியாது. என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தைய கடைசி வரைக்கும் என்கூட கொடுக்கனும் அத நான் நல்ல படியா பாத்துக்கணும் என்று கதறி அழுத படி கூறினார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.


    வாரிசு போஸ்டர்

    வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) என்ற பாடல் நேற்று வெளியாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில் தற்போது ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கனெக்ட்'.
    • இப்படம் நாளை டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

     

    கனெக்ட்

    கனெக்ட்


    'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    நயன்தாரா

    நயன்தாரா

    இந்நிலையில் கனெக்ட் படத்தின் புரொமோஷனுக்காக நயன்தாரா சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், அப்போ இல்ல இப்ப வரைக்கும் விமர்சனங்கள் வந்திட்டு இருக்கு. ஒவ்வொரு படத்துலயும் ஒன்னு சொல்றாங்க, உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டே இருப்பாங்க. எது பண்ணாலும் தப்பா ஆகிடுது. என் இயக்குனர்கள் என்கிட்ட என்ன சொல்றாங்களோ அதை நான் பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன் என்றார்.

    இப்படம் நாளை டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று உதயநிதி தெரிவித்திருந்தார்.

    நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார்.


    உதயநிதி ஸ்டாலின்

    இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்" என்று தெரிவித்திருந்தார்.


    விஜய் சேதுபதி - கமல்ஹாசன்

    இந்நிலையில், கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.


    டிமான்ட்டி காலனி

    அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.


    டிமான்ட்டி காலனி -2

    சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
    • இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    டிரைவர் ஜமுனா

    டிரைவர் ஜமுனா

     

    'டிரைவர் ஜமுனா' திரைப்படம் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கட்டிருந்தது. அதனபின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிரஞ்சீவியின் 154-வது படமான 'வால்டேர் வீரய்யா' படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
    • இந்த பாடலின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    வால்டேர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    வால்டேர் வீரய்யா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பாஸ் பார்ட்டி' பாடல் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.
    • இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

    இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வீர சிம்ஹா ரெட்டி

    வீர சிம்ஹா ரெட்டி

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

     

    வீர சிம்ஹா ரெட்டி

    வீர சிம்ஹா ரெட்டி

    இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மா பாவா மனோபாவலு என்ற பாடல் வருகிற 24ம் தேதி 3.19 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
    • இவர் தற்போது பகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


     செல்வராகவன்

    மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது" என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சீக்கிரம் ஸ்கிரிப்ட் எழுதி முடியுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
    • இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

     

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

     

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' வருகிற டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக நாடாளுமன்றத்தில் படபிடிப்பு நடத்த அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார். இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை. கங்கனா அனுமதி கேட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • துணிவு படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

     

    துணிவு

    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் 'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.

     

    துணிவு

    துணிவு

    இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், கேங்ஸ்டா.. என்று பதிவிட்டுள்ளார். மேலும் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ஷபிர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவை ரசிகர்கள் பலரும் அடுத்த பாடலின் அறிவிப்பாக இருக்கும் என்று இணையத்தில் பேசி வருகின்றனர்.

    ×