ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தி கிரேட் இந்தியன் கிச்சன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
தி கிரேட் இந்தியன் கிச்சன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்
தி கிரேட் இந்தியன் கிச்சன்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்
தி கிரேட் இந்தியன் கிச்சன்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' வருகிற டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com