என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் இன்று வெளியான புரோமோவில் அசீம் மற்றும் விக்ரமன் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 75-வது நாட்களை நெருங்கியுள்ளது.

     

    விக்ரமன்

    விக்ரமன்

    இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ரேங்க்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டினில் உள்ளவர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப 1 முதல் 10 வரை தங்களை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது அசீம் முதல் இடத்தில் நிற்க, இதனை கேள்வி கேட்கும் விதமாக விக்ரமன் ஏதோ கூற முயற்சிக்கிறார். அச்சமயம் விக்ரமன் ஏன் நீங்க கட்டப் பஞ்சாயத்துக்கு வறீங்க, பழக்கமாகிடுச்சோ என்று அசீம் கூறுகிறார்.

     

    விக்ரமன்

    விக்ரமன்

    இதனால் கோபமடையும் விக்ரமன், ஒரு விளையாட்டிற்காக ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோ அவமானப்படுத்துவதோ ரொம்ப தவறு. உங்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்குறேன். இதற்கு ஒரு உதாரணம் நீங்க சொல்லித்தான் ஆகனும் என்கிறார். இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரொமோவால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துக் கொண்ட ஜி.பி.முத்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

    இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த 'கனெக்ட்' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

     

    ஜி.பி.முத்து

    ஜி.பி.முத்து

    'கனெக்ட்' படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வினய், ஜி.பி.முத்து மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட ஜி.பி.முத்து நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறியதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது, நிகழ்ச்சி நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடம் படம் பார்க்க விரும்புவதாக கூறி அழைத்தனர்.

     

    ஜி.பி.முத்து

    ஜி.பி.முத்து

    ஆனால் என்னை எங்கோ ஒரு ஓரத்தில் அமரவைத்துவிட்டனர். அதோடு அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தரக்குறைவாக நடத்தினர். தூரப்போ என்று விரட்டினர். அது எனக்கு சங்கடமாக இருந்தது எனவே தான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அதன் பிறகு விக்னேஷ் சிவன் என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசினார். நான் அங்கிருந்து கிளம்பி வெகுதூரம் வந்துவிட்டதால் அடுத்த முறை சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • ’வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு

    வாரிசு

    தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

     

    இசை வெளியீட்டு விழா பணியை பார்வையிட்ட தமன்

    இசை வெளியீட்டு விழா பணியை பார்வையிட்ட தமன்

    'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இசை வெளியீட்டு விழாவிற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று பார்வையிட்டு இதன் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

     

    வாரிசு புதிய போஸ்டர்
    வாரிசு புதிய போஸ்டர்

    இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கரகாட்டக்காரன், அதிசய பிறவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனகா.
    • நேற்று மாலை கனகா வீட்டில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.

    கரகாட்டக்காரன், அதிசய பிறவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனகா. இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கனகா வீட்டில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து கனகா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்புப்படை வீரர்கள் உடனடியாக வீட்டில் துணிகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    தீ பற்றிய நடிகை கனகாவின் வீடு

    தீ பற்றிய நடிகை கனகாவின் வீடு

     

    இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றும் போது தீப்பிடித்து, துணிகளில் தீ பரவியது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேரன் தற்போது ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கிறார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    தமிழ்க்குடிமகன்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள், துணை நடிகர் நடிகைகள் ஆகியோர் வெளியிட்டனர்.


    தமிழ்க்குடிமகன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சேரன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வாத்தி’.
    • இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


    வாத்தி

    சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'வாத்தி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வாத்தி

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'நாடேடி மன்னன்' பாடல் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.



    • பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
    • பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவர் நைட்டில பாப்புலர் ஆனார். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவித் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


    உர்பி ஜாவித்

    இந்நிலையில், உர்பி ஜாவித்திற்கு எதிராக கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக வேறு, வேறு எண்களை உபயோகப்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து நடிகை உர்பி ஜாவித்துக்கு அந்த நபர் பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.


    உர்பி ஜாவித்

    இதுபற்றி மும்பை கோரேகாவன் காவல் நிலையத்தில் உர்பி ஜாவித் புகார் பதிவு செய்துள்ளார். மிரட்டலான தொலைபேசி பேச்சுகள் அடங்கிய பதிவுகளையும் அவர் போலீசிடம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் நவீன் கிரி என தெரிய வந்தது. அவரை பீகாரின் பாட்னா நகரில் வைத்து போலீசார் கைது செய்து அவர் மீது பாலியல் துன்புறுத்தல், பின்தொடருதல் மற்றும் குற்ற நோக்கோடு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர்.

    • அஜித் நடிக்கும் ’துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் 'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.


    துணிவு போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துணிவு' படத்தின் மூன்றாவது பாடல் 'கேங்ஸ்டா' என்று அறிவித்துள்ள படக்குழு. இந்த பாடலுக்கான லிரிக்ஸையும் வெளியிட்டுள்ளது. மேலும், 'கேங்ஸ்டா' பாடல் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டால் ரசிகர்கள் அடுத்த குத்தாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.



    • சிம்பு தற்போது ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பத்து தல

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர்.


    பத்து தல

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கவுதம் கார்த்திக் 'பத்து தல' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை புகைப்படங்களை வெளியிட்டு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.



    • ஜேன் ஜாங் சீனாவின் பிரபல பாடகியும் பாடலாசிரியருமாவார்.
    • இவர் தனக்கு தானே கொரோனா தொற்றை வரவழைத்துள்ளார்.

    சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பி.எப்.7 ஒமைக்ரான் என்ற வகை வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் பிரபல பாடகி ஒருவர் தனக்குத் தானே கொரோனாவை வரவழைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


    ஜேன் ஜாங்

    சீனாவின் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான ஜேன் ஜாங் (38) ஆங்கில வருடப் பிறப்பையொட்டி டிசம்பர் 31-ந் தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதையடுத்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று கருதிய அவர் கொரோனா பாதித்த தனது நண்பர்களை வேண்டுமென்றே அவர்கள் சிகிச்சைபெறும் மையங்களுக்கு சென்று சந்தித்து உள்ளார்.


    ஜேன் ஜாங்

    இதனால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சமூக வலதைளங்களில் தெரிவித்துள்ளார். சீன சமூக வலைதளங்களில் 4.3 கோடி பின் தொடர்பவர்களை கொண்டிருக்கும் ஜேன் ஜாங் இந்த பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ள நிலையில் பிரபலமான பாடகியே இப்படி செய்ததற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பாடகி ஜேன் ஜாங் தனது பதிவு களை அழித்துவிட்டு, தான் செய்ததற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அவதார்’.
    • இந்த திரைப்படம் 160 மொழிகளில் சமீபத்தில் வெளியானது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்து, வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.


    அவதார் தி வே ஆப் வாட்டர்

    3 ஆஸ்கார் விருதுகளை வென்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் சமீபத்தில் வெளியானது.


    அவதார் தி வே ஆப் வாட்டர்

    இந்நிலையில், 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.4,200 கோடியும் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் 74 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் இன்று வெளியான மூன்றாவது புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 74-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு 1980-களில் இருக்கும் கலை கல்லூரியாக மாறியுள்ளது. இதில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் நீங்கள் விரும்பும் நபரை அழைத்து நேர்காணல் செய்யலாம் என்று விக்ரமன் கூறுகிறார். இதைத்தொடர்ந்து, ஏடிகே, அசீமை நேர்காணல் செய்கிறார்.


    பிக்பாஸ், சீசன் 6

    அப்போது இந்த வீட்டை பற்றிய புரிதல் உங்களுக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஏடிகே, அசீமிடம் கூறுகிறார். இதற்கு அசீம் நான் நானாக இருக்கிறேன் என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ அவர்கள் அவர்களாக இல்லை என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    ×