என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதார்’.
- இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வெண்ணிலா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆதார்'. இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஆதார்
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் சிறந்த தமிழ் பட தயாரிப்பிற்கான விருது 'ஆதார்'திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி. சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’.
- இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் 'ராங்கி'. இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

ராங்கி
இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.

ராங்கி
இந்நிலையில், 'ராங்கி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரிஷா ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’.
- இந்த படத்தில் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

தமிழ்க்குடிமகன்
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

தமிழ்க்குடிமகன்
இந்நிலையில், தற்போது 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சாதினால் அவதிப்படும் குடும்பத்தை காட்சிப்படுத்துவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘கனெக்ட்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த 'கனெக்ட்' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

கனெக்ட்
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கனெக்ட்
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, "நேற்று திரைக்கு வந்த 'கனெக்ட்' திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் திரைத்துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

கனெக்ட்
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'கனெக்ட்' திரைப்படத்தை சட்டவிரோதமாக 2634 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
- இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்டு’.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

கோல்டு
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

கோல்டு
அதீத எதிர்பார்ப்புகளுடன் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமாக ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார்.
- நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.
பழம்பெரும் நடிகை லதா, மாலைமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு..
ராமநாதபுரம் ராஜாவின் மகளான நான் சினிமாவுக்குள் நுழைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எம்ஜிஆர் இயக்கிய அவருடைய சொந்த படத்தில் நான் அறிமுகமானேன். அந்த காலத்திலேயே வெளிநாட்டில் படப்படிப்பு என்று அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. அதே மாதிரி என்னை இதுவரை ராணியாகவே வாழவைத்துள்ளது.
கட்சிக்காக என்ன செய்யப்போற ? கட்சியில தீவிரமா ஈடுப்படு என்று எம்ஜிஆர் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் எனக்கு நடிப்பு மீது ஈடுபாடு இருந்தது. எம்ஜிஆர் தலைமையிலேயே நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதும் நடத்தினோம். இதில் 35 லட்சம் கிடைத்தது. நாடகத்திற்காக உழைத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததுபோக, ரூ.30 லட்சம் தேர்தல் நிதிக்காக வழங்கினேன்.
நான் எல்லோருக்கும் கொடுத்தேன்.. நீ எனக்கு கொடுத்திருக்கிறாய் என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்லுவார். அதன்பிறகு தேர்தலில் மாபெரும் வெற்றிப்பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.. என்றார்.
- 1959-ம் ஆண்டு சிப்பாய் கூந்துரு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சத்யநாராயணா.
- உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்திய நாராயணா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், கவுதாரம் பகுதியை சேர்ந்தவர் சத்ய நாராயணா (வயது 87). கடந்த 1935-ம் ஆண்டு பிறந்த இவர், விஜயவாடாவில் கல்லூரி படிப்பை முடித்தார். சத்திய நாராயணா 1959-ம் ஆண்டு சிப்பாய் கூந்துரு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் சின்ன கல்லு பெத்த லாபம் என்ற வசனம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 2019-ல் கடைசியாக 'மகரிஷி' படத்தில் நடித்து இருந்தார்.

சத்ய நாராயணா
தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மசூலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாக வெற்றி பெற்றார். சிறந்த நடிகருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருது பெற்று உள்ளார்.
ராமா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி குடமா சிங்கம் பங்காரு குடும்பம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்திய நாராயணா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவரது உடல் ஹைதராபாத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சத்ய நாராயணா
இந்நிலையில், சத்ய நாராயணா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பிரபல திரைப்பட ஆளுமை கைகலா சத்தியநாராயணா மறைவால் வேதனையடைந்தேன். பல்வேறு கதாபாத்திரங்களாலும், சிறப்பான நடிப்புத்திறமையாலும் தலைமுறைகளை கடந்து நன்கு அறியப்பட்டவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ప్రసిద్ధ సినీ దిగ్గజం శ్రీ కైకాల సత్యనారాయణ గారి మృతి పట్ల చింతిస్తున్నాను. విభిన్న పాత్రలతో అద్భుతమైన నటనా చాతుర్యం తో అనేక తరాల ప్రేక్షకులకు ఆయన చిరపరిచితులు. వారి కుటుంబసభ్యులకు,అభిమానులకు నా ప్రగాఢ సానుభూతి. ఓం శాంతి.
— Narendra Modi (@narendramodi) December 23, 2022
- சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
- இந்த விழாவில் 102 படங்கள் திரையிடப்பட்டது.
சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது நேற்று நிறைவு பெற்றது. இதில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

மாமனிதன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்து போய் விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. அந்த அனுபவத்தின் வழியாக ஒரு இயக்குனர் தன்னுடைய பார்வையை சொல்கிறார். முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.

விஜய் சேதுபதி - சீனுராமசாமி
எந்தவொரு படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல. இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால் வியூஸ் கூடுகிறது அதனால் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. உங்களுடைய பார்வையில் உங்களுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி ஒரு திரைப்படத்தை பாருங்கள். நடிகர் பூ ராமுவுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" எனத் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி விருதுக்கான பரிசுத்தொகையை விழாக்குழுவிற்கு நன்கொடையாக வழங்கினார்.
- அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பாடல் வரிகள் ரசிகர்களிடம் மோதலை ஏற்படுத்துவதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ரஜினி - கமல் இருவரின் ரசிகர்களும் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட அவர்களது திரைப்படங்கள் பொதுவான ரசிகர்கள் விரும்பிப்பார்க்கும் படங்களாகவே இருந்தன. ஆனால் இன்று விஜய் - அஜித் இருவர் திரைப்படங்களின் பாடல்களே ரசிகர்களுக்குள் மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படுவதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

வாரிசு - துணிவு
இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான "துணிந்தால் வெற்றி நமதே வா பதிலடிதான் தெரியுமடா உனக்குச் சம்பவம் இருக்கு பார் முடிவில் யார் பதிலடிதான்" என்று ரசிகர்களை உசுப்பேற்றும் வரிகளாக அமைந்திருப்பதாக கூறிவருகின்றனர். ஏற்கனவே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் பேசிய கருத்து ரசிகர்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் இந்தப் பாடல் வரிகளை குறிப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் அஜித் தற்போது 'துணிவு' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

அஜித்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தனது நண்பர்களுடன் உணவு உண்பது போன்றும் கப்பலில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் சமீபகாலமாக ரசிகர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்துப் வருகிறார்.
- இவர் ரசிகருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சமீபகாலமாக ரசிகர்களைச் சந்தித்துப் வருகிறார். முன்பாக சேலம், திருப்பூர், அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இதற்காகக் காலையிலிருந்தே பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமையகத்தில் 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "தளபதி விஜய் விழியகம்" கண்தானம் செயலி தொடங்கப்பட்டு உள்ளது. கண்பார்வைக்காக பிறர் உதவியை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவும் வகையில் செயல்படும் "தளபதி விஜய் விழியகம்" செயலியை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.

இதனை விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் கண் தானம் செய்ய முன் வருபவர்கள் பற்றிய விபரங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும் உதவி தேவைப்படும் நபர்களுக்கு உடனுக்குடன் உதவ முடியும் என்றனர்.
இதற்கு முன்பு மக்கள் இயக்கம் சார்பில் குருதிக் கொடை செயலி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நடிகை மும்தாஜ் 'மோனிஷா என் மோனலிசா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
- இவர் தற்போது இறைவழிபாட்டில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மோனிஷா என் மோனலிசா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். தொடர்ந்து, மலபார் போலீஸ், குஷி, சாக்லேட் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

மும்தாஜ்
ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி இருந்த மும்தாஜ், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். இவர் தற்போது தீவிர இறைவழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு கண்ணீர் மல்க இறைவழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






