என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர்களிடம் மோதலை ஏற்படுத்துகிறதா அஜித் பாடல் வரிகள்?
    X

    வாரிசு - துணிவு

    ரசிகர்களிடம் மோதலை ஏற்படுத்துகிறதா அஜித் பாடல் வரிகள்?

    • அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பாடல் வரிகள் ரசிகர்களிடம் மோதலை ஏற்படுத்துவதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    ரஜினி - கமல் இருவரின் ரசிகர்களும் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட அவர்களது திரைப்படங்கள் பொதுவான ரசிகர்கள் விரும்பிப்பார்க்கும் படங்களாகவே இருந்தன. ஆனால் இன்று விஜய் - அஜித் இருவர் திரைப்படங்களின் பாடல்களே ரசிகர்களுக்குள் மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படுவதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    வாரிசு - துணிவு

    இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான "துணிந்தால் வெற்றி நமதே வா பதிலடிதான் தெரியுமடா உனக்குச் சம்பவம் இருக்கு பார் முடிவில் யார் பதிலடிதான்" என்று ரசிகர்களை உசுப்பேற்றும் வரிகளாக அமைந்திருப்பதாக கூறிவருகின்றனர். ஏற்கனவே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் பேசிய கருத்து ரசிகர்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் இந்தப் பாடல் வரிகளை குறிப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    Next Story
    ×