என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்.'
    • இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் புகழ் பெற்றது. இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைக்கூறப்படும் ஒரு பாடல். இந்த மதிப்பு மிக்க அங்கீகாரத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு வாழ்த்துகள். இந்த ஆஸ்கர் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது.


    • அனைத்து விருதுக்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் தகுதியானது.
    • ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது 'நாட்டு நாட்டு' பாடல்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    மேலும் சிறந்த பாடலுக்கான விருதை 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது.

    இவ்விருதுகளை பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது 'நாட்டு நாட்டு' பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து. முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று கூறியுள்ளார்.

    • சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார்.
    • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

    அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் 'Everything Everywhere All at Once' திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

    சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படம் வென்றது.

    சிறந்த நடிகைக்கான விருது மிஷெல் யோ வென்றார். ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண் இவர் என்ற என்ற சாதனையையும் படைத்தார்.

    சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார்.

    சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

    சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக இயக்குனர்கள் டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர்.

    சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார்.

    சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 'Everything Everywhere All At Once' திரைப்படம் வென்றுள்ளது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
    • 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய்ஹோ" சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது.

    அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் 'எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்.

    சிறந்த பாடல் பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய்ஹோ" சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது.

    • யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
    • 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருதை வென்றனர்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    தாயை பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. '

    'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருதை வென்றனர்.

    • சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    பத்து தல

    பத்து தல

    இந்நிலையில், பத்து தல படத்தின் இரண்டாம் பாடலான நினைவிருக்கா? என்ற பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டு, இந்த பாடல் நாளை மாலை 6.00மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    சூர்யா 42

    சூர்யா 42

    இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற 14.03.2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மாபெரும் நிகழ்வில் ஒரு பிரமாண்ட திட்டம். காத்திருப்பு முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடந்து வருகிறது.

    கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள பழமையான டச்சுக் கோட்டையில் சண்டைக்காட்சிகளை படக்குழு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக நடந்து வரும் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க கிராமத்து மக்கள் வந்து செல்கிறார்கள்.

     

    இந்தியன் 2

    இந்தியன் 2

    இந்நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பில் அருகில் இருந்த ஊரில் கோவிலுக்கு நிதி கேட்டு சிலர் வந்ததாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பை கிராமத்து மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறையினர் விரைந்து வந்து ஊர் மக்களுடன் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இதன் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த சண்டைகாட்சிக்காக கமல்ஹாசன் சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.
    • இவர் சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா


    இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஷ்மிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வித்யாசமான புடவையில் வலம் வரும் ராஷ்மிகாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி
    • இவர் மீ டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    'மீ டூ' இயக்கம் ஒரு காலத்தில் சினிமா துறையை உலுக்கி எடுத்தது. பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகைகள் போர்க்கொடி தூக்கியதும் 'மீ டூ' இயக்கம் தொடங்கியது. அதன்பிறகு நடிகர்கள், இயக்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான நடிகைகள் பலர் வெளியே வந்து துணிச்சலாக மீ டூவில் புகார் தெரிவித்தார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள திரையுலகிலும் 'மீ டூ' இயக்கம் பரவி பரபரப்பானது. பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீ டூவில் சிக்கினர்.

     

    சாய் பல்லவி

    சாய் பல்லவி


    இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சாய் பல்லவியிடம் மீ டூ குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சாய் பல்லவி கூறும்போது. "பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமன்றி, வாய்மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். அதுவும் மீ டூவில்தான் வரும்'' என்றார். சாய் பல்லவி இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மாதுரி தீட்சித்.
    • இவரின் தாயார் சினேகலதா தீட்சித் காலமானார்.

    1984-ம் ஆண்டு வெளியான அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதுரி தீட்சித். அதன்பின்னர் பல படங்களில் நடித்து இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 1999-இல் ஸ்ரீராம் நேனே என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதுரி தீட்சித்திற்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2008ம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா தீட்சித் இன்று அதிகாலை காலமானார். இவரின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 90 வயதாகும் இவரது தாயாரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
    • அப்போது அவர், கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசினார்.

    சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசியுள்ளார்.

     

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்


    அவர் பேசியதாவது, "கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நமது உடலில் உள்ள இதயம் லப்டப் லப்டப் என்று பிறந்ததிலிருந்து சுமார் 70 வருடம் 80 வருடம் வரை அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா. அதேபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? என்று கேட்டார். இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறியதை பார்க்கும்போது எனக்கு அழுவதாக சிரிப்பதா என்று தெரியவில்லை என்று கூறினார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×