மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா காலமானார்

அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மாதுரி தீட்சித்.இவரின் தாயார் சினேகலதா தீட்சித் காலமானார்.
மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா காலமானார்
Published on

1984-ம் ஆண்டு வெளியான அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதுரி தீட்சித். அதன்பின்னர் பல படங்களில் நடித்து இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 1999-இல் ஸ்ரீராம் நேனே என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதுரி தீட்சித்திற்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2008ம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா தீட்சித் இன்று அதிகாலை காலமானார். இவரின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 90 வயதாகும் இவரது தாயாரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com