என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மாதுரி தீட்சித்.
    • இவரின் தாயார் சினேகலதா தீட்சித் காலமானார்.

    1984-ம் ஆண்டு வெளியான அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதுரி தீட்சித். அதன்பின்னர் பல படங்களில் நடித்து இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 1999-இல் ஸ்ரீராம் நேனே என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதுரி தீட்சித்திற்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2008ம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா தீட்சித் இன்று அதிகாலை காலமானார். இவரின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 90 வயதாகும் இவரது தாயாரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
    • அப்போது அவர், கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசினார்.

    சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசியுள்ளார்.

     

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்


    அவர் பேசியதாவது, "கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நமது உடலில் உள்ள இதயம் லப்டப் லப்டப் என்று பிறந்ததிலிருந்து சுமார் 70 வருடம் 80 வருடம் வரை அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா. அதேபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? என்று கேட்டார். இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறியதை பார்க்கும்போது எனக்கு அழுவதாக சிரிப்பதா என்று தெரியவில்லை என்று கூறினார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படம் 'சலார்'.
    • இப்படத்தில் கேஜிஃப் பட புகழ் யஷ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    சலார்

    சலார்


    இந்நிலையில் சலார் படத்தில் கேஜிஎஃப் பட புகழ் யஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யஷின் கதாப்பாத்திரம் 7 நிமிடம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    • சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் வித்யா பாலன் மிகவும் பிரபலமடைந்தார்.
    • வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதை நடிகைகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் வித்யா பாலனும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

     

    வித்யா பாலன்

    வித்யா பாலன்


    வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், "என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்த படத்தின் இயக்குனரை விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்தபோது நான் சந்தித்தேன். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்றேன். ஆனால் அவர் ஓட்டல் அறைக்கு போய் பேசுவோம் என்றார். ஓட்டல் அறைக்கு வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அவரது எண்ணம் புரிந்தது. எனவே ஓட்டல் அறைக்கு சென்று அறைக்கதவை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டே அவரிடம் பேசினேன். நான் கதவை மூடுவேனா என்று எதிர்பார்த்து சிறிதுநேரம் காத்து இருந்தார். நான் கதவை மூடாமல் இருந்ததால் ஒத்துழைக்க மாட்டேன் என்று புரிந்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவரது படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார்'' என்றார்.

    • பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
    • சன்னி லியோன் தொடர்பான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விருப்பம்.

    ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

     

    சன்னி லியோன்

    சன்னி லியோன்

    சன்னி லியோனை சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தனக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சன்னி லியோன் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


    சன்னி லியோன்

    சன்னி லியோன்

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள மோசடி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது என்றும், சன்னிலியோன் கிரிமினல் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் தேவையில்லாமல் அவர் துன்புறுத்தப்படுகிறார் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
    • அப்போது அவர், அரசியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேசினார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் பேசியதாவது:

    நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது. நான் அந்தச் சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். அப்படி செல்வதாக இருந்தால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் சென்றால் முதலில் என் முககவசத்தை கழற்ற வேண்டியிருக்கும். அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இயலாத காரியம். இதை எப்படி மக்களிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தேன்.

    அப்போது என்னுடைய மருத்துவர், 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் கூறுகிறேன். ரசிகர்களிடம் நான் விளக்கம் அளிக்கிறேன்' என்று கூறி எனக்கு துணையாக நின்றார். அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தேன் என தெரிவித்தார்.

    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.
    • இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து கண்ணை நம்பாதே படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். கண்ணை நம்பாதே படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில் "இயக்குனர்கள் சாதுவான கதைகளை சொல்கிறார்கள். எனக்கு, என்னுடைய உடல் வாக்கிற்கு அந்த மாதிரி கதைகள் தான் சரியாக இருக்கும் என அவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். எனக்கும் அது வசதியாக இருக்கிறது, முடிந்தவரை 'மனிதன்' திரைப்படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைக்களம் கொஞ்சம் சவாலான கதாபாத்திரங்கள் இப்படி செய்யனும் என்ற நோக்கத்தோடு திரைப்படம் நடித்து வருகிறேன்." என்று உதயநிதி ஸ்டாலின் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    தசரா போஸ்டர்

    மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'மைனரு வேட்டிக்கட்டி' பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'தசரா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 


    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    லியோ படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • நகைச்சுவை நடிகரான டேனியல் ஆனி போப் பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நகைச்சுவை நடிகரான டேனியல் ஆனி போப் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.


    டேனியல் ஆனி போப்

    கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற டேனியல் ஆனி போப் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.


    டேனியல் ஆனி போப் வெளியிட்ட வீடியோ

    தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் டேனியல் ஆனி போப்பின் சமூக வலைதள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'சரக்கு சீனுக்கு என்னலாம் பண்றோம் பாருங்க' என்று லிக்கர் மேக்கிங் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை குவித்தது.

    மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.


    பொன்னியின் செல்வன்

    இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படக்குழு விருது பெறுவதற்காக ஹாங்காங் சென்றுள்ளனர். அதாவது, நாளை (மார்ச் 12 ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், 'பொன்னியின் செல்வன் -1' சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


    ஹாங்காங் செல்லும் பொன்னியின் செல்வன் படக்குழு

     இந்த விழாவில் பங்கேற்க லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக லைக்கா ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குனர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரசிகர்கள் இணைந்து சென்னையில் நடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
    • இந்த விழாவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.

    ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சென்னையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.

    வருகிற 26-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் இந்த விழாவிற்காக ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களாகச் சென்னை மேயர் பிரியாவை சந்தித்து அனுமதி கேட்டு அதற்கான திட்டமிடல்களைத் தெரிவித்து அனுமதியும் வாங்கியிருக்கிறார்கள்.

    இதேபோல சென்னை காவல் ஆணையரகத்தில் விழா நடப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சேதங்களைத் தவிர்க்க முன்பணமாகப் பெரிய தொகையையும் ரசிகர்கள் சார்பில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்தும் 10 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி 47 வருடங்களாக மக்களை மகிழ்வித்து வருவதையொட்டி அவருக்காக நடக்கும் பாராட்டு விழாவில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணராவ் கெய்க்வாட், கலைப்புலி எஸ்.தாணு, ஏ.சி.சண்முகம், சு.திருநாவுக்கரசர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ். ரவிகுமார், சைதை. சா.துரைசாமி உட்பட திரையுலகினர் பலர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×