என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இசை படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
    • ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசை படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் மேல் முறையீடு செய்திருந்தார்.

    அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் என கூறியிருந்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு, நான்கு வாரங்களில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 55 ஆண்டுகால பொது வாழ்க்கை அனைத்துமே புகைப்பட கண்காட்சியாக தொகுப்பட்டிருக்கிறது.


    கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்

    இந்த கண்காட்சியை அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பத்து நாட்களுக்கு மேலாக ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இவருடன் அமைச்சர் சேகர் பாபு , நடிகர் யோகிபாபு ஆகியோர் உடனிருந்தார்கள்.


    கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்

    குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, " முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்று தான். 55 ஆண்டுகாலமாக அவர் பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டிருக்கிறார். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர். " என்று கூறினார். பின்னர் இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தகம் ஒன்றில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.
    • இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    கண்ணை நம்பாதே

    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.


    கண்ணை நம்பாதே போஸ்டர்

    இதையடுத்து, 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • சமீபத்தில் நடிகர் நரேஷ் நடிகை பவித்ராவை முத்தமிட்டு இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
    • பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை நரேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.


    நரேஷ் - பவித்ரா லோகேஷ்

    இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.


    நரேஷ் - பவித்ரா லோகேஷ்

    சமீபத்தில் நடிகர் நரேஷ் நடிகை பவித்ராவை முத்தமிட்டு இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நரேஷ் - பவித்ரா ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை நரேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களது திருமணம் தற்போது கன்னட திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


    • இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.
    • இப்படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.

    தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடிக்கும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS).இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்குகிறார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகும் சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.


    அஸ்வின்ஸ் பட போஸ்டர்

    இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். பாபிநீடு பி இந்தப் படத்தை வழங்குகிறார் மற்றும் இணைத் தயாரிப்பாளராக பிரவீன் டேனியல் உள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    விஜய் சித்தார்த் இசையமைக்கும் இப்படத்திற்கு எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

    • சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


    பத்து தல போஸ்டர்

    அதன்படி, 'பத்து தல' பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் இசையக்கும் கிளிம்ஸ் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கொட்டுக்காளி'.
    • இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.


    கொட்டுக்காளி போஸ்டர்

    இவர் தற்போது தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியாகி கவனம் பெற்றது.


    கொட்டுக்காளி

    இந்நிலையில், 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் சுதா கொங்கரா 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார்.
    • சமீபத்தில் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து ஏற்பட்டது.

    2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார்.


    வெற்றிமாறன் -சுதா கொங்கரா

    தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    வெற்றிமாறன் -சுதா கொங்கரா 

    சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் "சிறந்த வலி. சிறந்த எரிச்சலூட்டும்! ஒரு மாத இடைவெளியில்! இது நான் விரும்பிய இடைவேளை அல்ல" என்று ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டிருந்தார்.


    வெற்றிமாறன் -சுதா கொங்கரா

    இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என் இருண்ட இடைவெளியில் இருந்து விடுதலை.என் நண்பனின் "கடைசி நாள்" படப்பிடிப்பு! " என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூத்தகுடி’.
    • 'மூத்தகுடி’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    தி ஸ்பார்க்லேண்ட் (The Sparkland) நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான திரைப்படம் 'மூத்தகுடி'. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா திரையில் மீண்டும் நடிக்கிறார்.


    மேலும், இப்படத்தில் 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் கதாநாயகன் தருண்கோபி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


    1970 -களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் படக்குழு மிகுந்த ஆராய்ச்சி செய்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது.


    படம் குறித்து இயக்குனர் ரவி பார்கவன் கூறியதாவது, "நிஜத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இப்படம். உண்மை சம்பவத்தை மிக அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளேன். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளோம். திரையில் நீங்கள் பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் வாழும் அனுபவத்தை தரும்.


    மூத்த நடிகை கே ஆர் விஜயா அம்மா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது கேரவனே வேண்டாம் படக்குழுவினருடன் இருக்கிறேன் என்று எப்போதும் படப்பிடிப்பில் தான் இருப்பார். எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். நடிகர் தருண் கோபி எதிர் நாயகனாக கலக்கியுள்ளார். அவர் தந்த ஒத்துழைப்பு மிகப்பெரிது. பிரகாஷும் அவரும் சண்டைக்காட்சி நடிக்கும் போது அவருக்கு அடிப்பட்டுவிட்டது.


    ஆனால் அப்போது கூட, படக்குழுவின் சிரமத்தை உணர்ந்து, படப்பிடிப்பை முடித்து விட்டே சென்றார். படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். இப்படம் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு நல்லபடைப்பாக, ரசிகனுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்றார்.


    "அசுரன்" திரைப்பட படப்பிடிப்பு நடந்த, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை,டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • பாடகி லேடி காகா பாடிய பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
    • ஹோல்ட் மை ஹேண்ட் என்ற இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது.

    பாப் இசையுலகின் பிரபலமான பாடகி லேடி காகா பாடிய பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. டாப் கன் மேவரிக் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை லேடி காகா பாடியிருந்தார். ஹோல்ட் மை ஹேண்ட் என்ற இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது. இந்தப்பாடலைத்தான் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதிற்குத் பரிந்துரை செய்திருந்தது.


    லேடிகாகா

    இந்த நிலையில் மார்ச் 13-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க இருக்கும் விருது வழங்கும் விழா மேடையில் லேடி காகா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. லேடி காகா தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதனால் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பல கலைஞர்களின் கனவாக இருக்கும் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டும் லேடி காகா கலந்து கொள்ளாமல் தவிர்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    • கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.
    • இவர் சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.


    ராஷ்மிகா மந்தனா

    நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அழகுக்கு உதாரணமாக யாரையும் சொல்ல முடியாது. எல்லோரிடமும் ஒரு விதமான அழகு இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியின் முன்னால் நின்று என்னை நான் பார்த்துக் கொள்ளும்போது ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டால் போதும்.


    ராஷ்மிகா மந்தனா

    அப்படித்தான் நான் நினைக்கிறேன். சிலர் பருமனாக இருந்தால்தான் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்கள் உடலின் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆறு மாதம் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். என்னை பொறுத்தவரை நான் ஒரு உடற்பயிற்சியாளரை நியமித்து இருக்கிறேன். அவரது ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடக்கிறேன். அதன் மூலம் எனது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தை காப்பாற்றி வருகிறேன்'' என்றார்.

    • கடந்த 2019-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஒத்த செருப்பு’.
    • இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    ஒத்த செருப்பு

    பார்த்திபன் மட்டுமே தனி கதாபாத்திரமாக நடித்திருந்த இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை பார்த்திபனே தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், 'ஒத்த செருப்பு' திரைப்படத்தை மலையாள நடிகர் மோகன் லாலை வைத்து ரீமேக் செய்ய முயற்சித்ததாக பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    பார்த்திபன் -மோகன் லால்

    அதில், "'Alone'(Malayalam) இன்னும் பார்க்கவில்லை.actual-ஆ ஒத்த செருப்பை லால் சாரை வைச்சுதான் remake செய்யனும்னு ஆசைபட்டேன் முயற்சியும் பண்ணேன். எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்திருக்கிறது. மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    ×