பிரபல நடிகையை 4-வது திருமணம் செய்து கொண்ட மகேஷ் பாபு சகோதரர்..

சமீபத்தில் நடிகர் நரேஷ் நடிகை பவித்ராவை முத்தமிட்டு இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை நரேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நரேஷ் -பவித்ரா லோகேஷ்
நரேஷ் -பவித்ரா லோகேஷ்
Published on

கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்

இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்

சமீபத்தில் நடிகர் நரேஷ் நடிகை பவித்ராவை முத்தமிட்டு இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நரேஷ் - பவித்ரா ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை நரேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களது திருமணம் தற்போது கன்னட திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com