என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கடந்த 2019-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஒத்த செருப்பு’.
    • இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    ஒத்த செருப்பு

    பார்த்திபன் மட்டுமே தனி கதாபாத்திரமாக நடித்திருந்த இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை பார்த்திபனே தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், 'ஒத்த செருப்பு' திரைப்படத்தை மலையாள நடிகர் மோகன் லாலை வைத்து ரீமேக் செய்ய முயற்சித்ததாக பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    பார்த்திபன் -மோகன் லால்

    அதில், "'Alone'(Malayalam) இன்னும் பார்க்கவில்லை.actual-ஆ ஒத்த செருப்பை லால் சாரை வைச்சுதான் remake செய்யனும்னு ஆசைபட்டேன் முயற்சியும் பண்ணேன். எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்திருக்கிறது. மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் ‘தனி ஒருவன்’.
    • இப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

    மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

    தனி ஒருவன்

    ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனிஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தானும், சகோதரர் ராஜாவும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருவதால், பணிகள் முடிந்த பிறகு இருவரும் தனிஒருவன் படத்தில் இணைவோம் என கூறியிருந்தார்.

    தனி ஒருவன்

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி 'தனி ஒருவன்' இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, ரசிகர் ஒருவர் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயம் ரவி 2024-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என பதிலளித்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    விடுதலை

    விடுதலை

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

     

    விடுதலை

    விடுதலை


    இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று முன்தினம் (மார்ச் 8) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை படத்தில் இடம் பெற்றுள்ள அருட்பெரும் ஜோதி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா குரலில் உருவாகி வெளியாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

     

    பதான்

    பதான்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'பதான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    பதான்

    பதான்

    இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
    • தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

     

    கூழாங்கல்

    கூழாங்கல்


    இந்நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்சின் அடுத்த பட அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியாகி விருதுகளை வென்ற கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கவுள்ளார். இதில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு கொட்டுக்காளி என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.


    கொட்டுக்காளி

    கொட்டுக்காளி

    இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, "ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க 'டைகர் அவார்ட்' வென்று, 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
    • சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷ் அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.

     

    சாக்ஷி அகர்வால்

    சாக்ஷி அகர்வால்

    இந்நிலையில் சாக்ஷி அகர்வால் புடவையில் இருக்கும் புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, லாங் டிரைவ் போலாமா? என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி'.
    • இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'குலேபகாவலி, 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண், தற்போது காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     

    கோஸ்டி

    கோஸ்டி


    சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற மார்ச் 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'கோஸ்டி' டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'.
    • விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    தங்கலான்


    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


    தங்கலான்

    தங்கலான்


    இந்நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், 'உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் நானி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘தசரா’.
    • இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    தசரா

    மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'மைனரு வேட்டிக்கட்டி' பாடலின் தமிழ் வெர்ஷனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முத்தமிழ் வரிகளில் அனிருத், தி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.

    'தசரா' திரைப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘செல்பி’.
    • இப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகி வெளியான திரைப்படம் 'செல்பி'.


    செல்பி

    மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவான இப்படத்தை ராஜ் மேத்தா இயக்கினார். மேலும், இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.


    செல்பி

    கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'செல்பி' திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் கடந்ததையடுத்து தற்போது வரை உலக அளவில் ரூ.21.85 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ.16 கோடியை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்ஷய் குமார் படங்களில் முதல் நாள் வசூலில் மிக குறைந்த வசூலை பெற்ற திரைப்படமாக 'செல்பி' உள்ளது.

    • நடிகர் சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இதைத்தொடர்ந்து இவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    சிம்பு

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சிம்புவின் 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.


    எஸ்.டி.ஆர்.48

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2024-ஆம் ஆண்டு  வெளியாகவுள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் பிளட் அண்ட் பேட்டில்' (Blood and Battle) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • நடிகர் நானி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'தசரா'.
    • இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் நானி

    மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் நானி மாலை மலர் நிறுவனத்திற்கு சர்ப்ரைஸாக விசிட்டடித்தார். மேலும், அங்கு பணிப்புரியும் ஊழியர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவர்களையும் உற்சாகப்படுத்தினார்.

    'தசரா' திரைப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×