வைரலாகும் காஜல் அகர்வாலின் கோஸ்டி பட டிரைலர்

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி'.இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வைரலாகும் காஜல் அகர்வாலின் கோஸ்டி பட டிரைலர்
Published on

'குலேபகாவலி, 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண், தற்போது காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோஸ்டி
கோஸ்டி

கோஸ்டி

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற மார்ச் 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'கோஸ்டி' டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com