உதயநிதி படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று என்ன தெரியுமா..?

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

கண்ணை நம்பாதே

மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

கண்ணை நம்பாதே போஸ்டர்

இதையடுத்து, 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com