search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madhuri dixit"

    • ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    1993 - ம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன்  திரைப்படம் 'கல்நாயக்' .  முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார். இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்தனர் .

    இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.இப்படத்தின் 'சோலி கே பீச்சாய் க்யா ஹை' என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.

    இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு 'கல்நாயக் 2' படத்தை இயக்குனர் சுபாஷ் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான கதையை அவர் தயார் செய்துள்ளார்.


    இந்த படத்தில் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் ,நடிகைகள் குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இத்திரைப்படத்தில் வில்லனோ, சண்டை காட்சிகளோ கிடையாது
    • பெரும்பாலான பாடல்களை எஸ்பிபி மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்

    கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரும் வெற்றி பெற்றவைகளில் பெரும்பாலானவை "ஆக்ஷன் திரில்லர்" ரகத்தை சேர்ந்தவை.

    பெரிய ஹீரோ, மிரட்டும் வில்லன் கதாபாத்திரம் மற்றும் அதிர வைக்கும் பிரமாண்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றால்தான் திரைப்படங்களை காண இளைஞர்கள் திரையரங்குகளுக்கு வருவதாகவும், வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பல ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இவை இல்லாத திரைப்படங்கள் ஓரளவு வசூலை செய்தாலும் பெரும் வெற்றியை பெற முடிவதில்லை.

    முதல்முதலாக ரூ.200 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படத்தில் சண்டை, வன்முறை, இரட்டை அர்த்த நகைச்சுவை, ஆணாதிக்க காட்சிகள் எதுவும் இன்றி மென்மையான குடும்ப கதையை களமாக கொண்டது.


    1994ல் வெளிவந்த, ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் (Rajshri Productions) தயாரிப்பில் சூரஜ் பர்ஜாத்யா எழுதி, இயக்கிய இந்தி திரைப்படமான, "ஹம் ஆப்கே ஹை கோன்" (Hum Aapke Hain Koun), இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் மேல் (ரூ.210 கோடி) வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.

    1994 ஆகஸ்ட 4 அன்று தெற்கு மும்பை பகுதியின் லிபர்டி திரையரங்கில் வெளியாகி அங்கு மட்டுமே 100 வாரங்களுக்கும் மேலாக ஓடியது.

    குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியானாலும், வாய்மொழி விளம்பரத்திலும், குடும்பம் குடும்பமாகவே பார்க்க சென்ற மக்களின் அமோக வரவேற்பிலும், பிற திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.


    தமிழில் "நான் உங்களுக்கு யாராம்?" எனும் பொருள்படும் தலைப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" திரைப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாகவும், மாதுரி தீட்சித் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

    பிரேம் எனும் இளைஞரும் அவரது அண்ணியின் தங்கையான நிஷாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறியதா என்பதை குடும்ப கொண்டாட்டங்களின் பின்னணியில் கூறும் ஒரு நேர்த்தியான கதையமைப்பே இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    ராம்லட்சுமண் இசையில் 14 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்.


    இனிமையான பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

    தற்போது இந்தியாவின் முன்னணி பாலிவுட் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் சல்மான் கான் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ஒரு சண்டை காட்சி கூட கிடையாது என்பது மற்றுமொரு ஆச்சரியம் அளிக்கும் தகவல்.

    இதில் பிரேம் வேடத்தில் நடிக்க முதலில் தயாரிப்பாளர்கள் தேர்வு செய்த நடிகர், அமீர் கான். ஆனால், இக்கதை தன்னை பெரிதாக ஈர்க்கவில்லை என அவர் கூறியதால், வாய்ப்பு சல்மான் கானுக்கு சென்றது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" பட வசூல் சாதனையை, சுமார் 15 வருடங்கள் கடந்து அமீர் கான் கதாநாயகனாக நடித்து வெளியான "த்ரீ இடியட்ஸ்" ரூ.300 கோடி வசூல் செய்து முறியடித்தது.

    • அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மாதுரி தீட்சித்.
    • இவரின் தாயார் சினேகலதா தீட்சித் காலமானார்.

    1984-ம் ஆண்டு வெளியான அபோத் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதுரி தீட்சித். அதன்பின்னர் பல படங்களில் நடித்து இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 1999-இல் ஸ்ரீராம் நேனே என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாதுரி தீட்சித்திற்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2008ம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா தீட்சித் இன்று அதிகாலை காலமானார். இவரின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 90 வயதாகும் இவரது தாயாரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    பாராளுமன்ற தேர்தலில் மாதுரி தீட்சித்தை புனே தொகுதி வேட்பாளராக களம் இறக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. #MadhuriDixit #BJP
    மும்பை:

    வருகிற 2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதா கட்சி இப்போதே தயாராகி விட்டது.

    முதல் கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தற்போதைய எம்.பி.க்கள் பலர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.

    இதனால் எம்.பி.க்களின் செயல்பாடுகள், தொகுதியில் அவர்களுக்கு உள்ள நற்பெயர் போன்றவை குறித்து கட்சி மேலிடம் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. செயல்பாடு சரியில்லாத எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    இதில் மராட்டிய மாநிலம் புனே தொகுதியின் தற்போதைய பா.ஜனதா எம்.பி.யான அனில் ஷிரோலேயின் செயல்பாடு சரியில்லை என்றும், அவர் மீது தொகுதி மக்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கட்சி மேலிடத்துக்கு தெரிய வந்துள்ளது.

    அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் வெற்றி வாய்பை பா.ஜனதா இழந்து விடும், தகுதியான சக்தி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து பிரபல நடிகை மாதுரி தீட்சித்தை புனே பாராளுமன்ற தொகுதியில் நிறுத்துவது பற்றி பா.ஜனதா வேட்பாளர் தேர்வு குழு ஆலோசித்து வருகிறது.

    ஹேமமாலினிக்கு அடுத்தபடியாக இந்திப்பட உலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். அவர் சினிமாவை விட்டு விலகினாலும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவருக்கு ரசிகர்களிடையே இன்னும் மவுசு குறையவில்லை. அவரது நிகழ்ச்சிக்கு கூட்டம் கூடுகிறது.

    மேலும் மராத்தி மொழி பேசும் நடிகை என்பதால் மராத்தி மக்களை கவரலாம் என்றும் பா.ஜனதா மேலிடத்துக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித் பா.ஜனதாவில் உறுப்பினராக உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரது பிரசார கூட்டத்துக்கு கடுமையான கூட்டம் கூடியது.

    எனவே மாதுரி தீட்சித்தை புனே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா மும்பையில் மாதுரி தீட்சித் வீட்டுக்கு சென்று அவரது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதற்கு மாதுரி தீட்சித்தும் சம்மதித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #ParliamentElection
    ×