என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரூ.6 கோடி மதிப்பிலான தனது மெக்லாரென் சூப்பர் காரில் வந்த மாதுரி தீட்சித்
    X

    ரூ.6 கோடி மதிப்பிலான தனது மெக்லாரென் சூப்பர் காரில் வந்த மாதுரி தீட்சித்

    • கடந்தாண்டு மெக்லாரென் நிறுவனம் தனது சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது.
    • இதன் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகும்.

    பிரிட்டனை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தியாளர் மெக்லாரென் இந்திய சந்தையில் 50 கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    இதனை கொண்டாடும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மெக்லாரென் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தனது மெக்லாரென் 750S காரில் வந்தார்.

    கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட மாதுரி தீட்சித் பல கோடி மதிப்பில்லா பல கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தான் மெக்லாரென் சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 5 கோடியே 91 லட்சம் ஆகவும் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 331 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மெக்லாரென் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×