என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தினத்தந்தி அதிபர் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தினத்தந்தி அதிபர் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் மரியாதை செலுத்தினர். நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அவர் பேசியதாவது, பத்திரிக்கை துறை மட்டும் இல்லாமல் விளையாட்டுத் துறையிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை அவரை சாரும், அனைவரையும் நேசித்த பெருமகன். அவருடைய நினைவை போற்றுவதில் பெருமை அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


    செய்தியாளர்களை சந்தித்த சீமான்
    செய்தியாளர்களை சந்தித்த சீமான்

    அப்போது அம்பேத்கர் பிறந்தநாளுக்கு நடிகர் விஜய்யின் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது அரசியல் நகர்வாக இருக்குமோ? என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், அதற்கான முயற்சியை தான் தம்பி செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். மாற்று என்பதில் இந்த கட்சியை விட்டால் அந்த கட்சி என்று அரை நூற்றாண்டுகளை இந்த நிலம் கடந்து விட்டது. தம்பியெல்லாம் வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்து தான் இதையெல்லாம் செய்கிறார் என்றார்.

    மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் சீமானின் ஆதரவு இருக்குமா? என்று கேட்டதற்கு, நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை. தம்பிதான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றார். எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம் என்றும் சீமான் தெரிவித்தார்.

    • தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.
    • இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

    தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்குகிறார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகும் சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது. 


    அஸ்வின்ஸ்

    அஸ்வின்ஸ்

    இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    அஸ்வின்ஸ்

    அஸ்வின்ஸ்

    இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் வசந்த் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.


    என்டிஆர்30

    என்டிஆர்30

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ருத்ரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள என்ன பெத்த அம்மாவே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    என்ன பெத்த அம்மாவே பாடல்

    என்ன பெத்த அம்மாவே பாடல்


    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ள என்ன பெத்த அம்மாவே என்ற பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தின் பாடலை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    • இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பண்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன்.
    • இவர் தற்போது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

    1989ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி தேவை, ஹவுஸ் ஃபுல், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர்.


    பார்த்திபன்

    பார்த்திபன்

    இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பார்த்திபன்

    பார்த்திபன்

    இந்நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், 'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் நடிகர் பானுசந்தருக்கு பார்த்திபன் டப்பிங் கொடுத்த வீடியோவை பகிர்ந்து, இந்தக் குரல் யாரெனத் தெரிகிறதா? என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி பதில் பதிவிட செய்துள்ளது.

    • பிரபல நடிகர் கிரேஸி மோகனின் மனைவி நளினி.
    • இவர் இன்று இயற்கை எய்தினார்.

    நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த கிரேஸி மோகன், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி காலமானார். இந்நிலையில், இவரது மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று இயற்கை எய்தினார்.


    கமல்

    இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’.
    • இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


    சாகுந்தலம்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'மகிமை ஆலயம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


    மாமன்னன்

    அதன்படி, 'மாமன்னன்' திரைப்படத்தை பக்ரீத் பண்டிகையையொட்டி வரும் ஜூன் 29-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • சிலம்பாட்டம் படத்தின் மூலம் பிரபலமானவர் சனாகான்.
    • இவர் முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, சிலம்பாட்டம், தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனா கான். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துள்ளார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார்.


    முஃப்தி அனஸ் -சனாகான்

    இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. திருமணத்திற்கு பின் நடிகை சனாகான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதிலுமே பங்கு பெறாமல் தன்னுடைய குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.


    முஃப்தி அனஸ் -சனாகான்

    இந்நிலையில் சனா கானை அவருடைய கணவர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் மும்பையில் நடந்த இஃப்தார் விருந்தில் முஃப்தி அனஸ் மற்றும் சனா கான் கலந்து கொண்டிருந்தார். அப்போது சனா கான் கையை பிடித்து அவரது கணவர் வேகமாக இழுத்து சென்றிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா? இழுத்து செல்வது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    சனாகானை இழுத்து சென்ற கணவர்

    இதைத்தொடர்ந்து, இதற்கு விளக்கம் கொடுத்துள்ள சனா கான் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், எனக்காக கவலைப்பட்டதற்கு நன்றி. எங்கள் கார் டிரைவரை எங்களால் அழைக்க முடியவில்லை. நான் அப்பகுதியில் நின்றதால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் அவர் என்னை அப்பகுதியில் இருந்து விரைவாக அழைத்துச் செல்லும் நோக்கில் அப்படி செய்தார் என்று கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது.
    • இதில், ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியாவில் தனது பொருட்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.


    ஏ.ஆர்.ரகுமான் -டிம் குக்

    ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.


    டிம் குக் -சூரஜ் நம்பியார் -மவுனி ராய்

    இதையடுத்து இந்த திறப்பு விழாவையொட்டி நேற்று திரைப்பிரபலங்கள் பலர் இந்த நிறுவனத்தை பார்வையிட்டனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் மாதுரி தீட்சித், மவுனி ராய், தயாரிப்பாளர் போனி கபூர், பாடகர் அர்மன் மாலிக் என பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு.
    • இவர் இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

    இதையடுத்து பல படங்களில் நடித்த சிம்பு உடல் எடை காரணமான பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். பின்னர் தீவிர உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்த இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து , 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' போன்ற படங்களின் வெற்றியின் மூலம் கவனம் பெற்றார்.


    ரசிகர்களுக்கு உணவு பரிமாறிய சிம்பு

    இந்நிலையில், சிம்பு இன்று சென்னையில் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தும் பரிமாறியிருக்கிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இந்தியன் -2

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பை முடித்த ஷங்கர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றார். இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.


    இந்தியன் -2

    இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள ஷங்கர் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "இத்தனை ஆற்றல் நிறைந்த படப்பிடிப்பிற்கு நன்றி கமல் சார். நாம் மீண்டும் மே மாதத்தில் இந்தியன் 2 கிளைமேக்ஸ் காட்சியில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், கமல் உடனான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


    ×