என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'.
- இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சில நேரங்களில் சில மனிதர்கள், நவீன சரஸ்வதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் சொல் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடேட் (Sol Production Pvt.Ltd) சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள வெப்தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'. என். பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் ஆகியோர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் தொடரில் அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடருக்கு பர்மா, என்னோடு விளையாடு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுதர்சன் எம் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகை அபிராமி பேசியதாவது, "நடிகை அபிராமி பேசியதாவது, இந்த மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ஜீ5- க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும்.

இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீனேஜ் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி" என்று கூறினார்.

மேலும், நடிகர் ராகவ் பேசியதாவது, இந்த சீரிஸ் பாம்பே நிறுவனத்தின் தயாரிப்பு, எழுத்தாளரும் மும்பையை சேர்ந்தவர். ஆன்லைனில் ஆடிசன் கேட்டிருந்தபோது, நான் இதில் வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் சார்மிங்காகவும் இருக்கனும் வயலண்டாகவும் இருக்கனும் அப்படி ஒரு ஆள் தேவை என்றார்கள். இதே காரணத்திற்காக தான் பாலசந்தர் சார் என்னை நடிக்க வைத்தார். என்னைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதால், நான் ஒரு காட்சி நடித்து அனுப்பினேன். அவர்களுக்கு பிடித்து என்னை நடிக்க வைத்தார்கள். கௌஷிக் உடன் முன்பாகவே இணைந்து ஒரு சீரிஸ் வேலை பார்த்தோம் அது வெளியாகவில்லை, ஆனால் இந்த சீரிஸில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள் இந்த சீரிஸ் சிறப்பாக வர வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி என்று பேசினார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
- இவர் தற்போது சன்னிதானம் பிஓ படத்தில் நடித்து வருகிறார்.
யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ. ராஜீவ் வைத்யா இயக்கும் இப்படத்தை சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சன்னிதானம் பிஓ
இப்படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது.

சன்னிதானம் பிஓ
இப்படத்தின் படப்பிடிப்பு சபரிமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபு சபரிமலைக்கு வரும் பக்தர்களை சந்தித்து மகிழ்ச்சியாக கலந்துரையாடி கைக்குலுக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
— Yogi Babu (@iYogiBabu) April 19, 2023
- நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

வேதாந்த்
சமீபத்தில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனின் தன் மகன் வேதாந்த் செய்யும் சாதனைகளை தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்
சமீபத்தில் வேதாந்த் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாக மாதவன் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் பதிவு
இந்நிலையில், வேதாந்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜயகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் , 17 வயது மகன் வேதாந்த் 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.@ActorMadhavan | @VedaantMadhavan pic.twitter.com/XUgBk0HhK9
— Vijayakant (@iVijayakant) April 19, 2023
- இயக்குனர் சுகுமார் தற்போது 'புஷ்பா -2' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் கணக்குகளை சரியாக காட்டவில்லை என்று வருமான வரித்துறை சோதனை நடந்தி வருகிறது.
மேலும், 'புஷ்பா' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவான 'சாகுந்தலம்' திரைப்படம் தற்போது வரை ரூ.10 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாகுந்தலம்
இதையடுத்து, தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருக்கும் சிட்டிபாபு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நடிகை சமந்தா பற்றி பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறியதாவது, எல்லா தடவையும் 'செண்டிமெண்ட்' கை கொடுக்காது. பாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் தரக்குறைவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள். கதாநாயகி அந்தஸ்தை இழந்த சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்திற்கு எப்படிப் பொருந்தினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு சாகுந்தலம் திரைப்படம் குறித்து எந்த ஆர்வமும் இல்லை என்று பேசியிருக்கிறார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ ருத்ரன்’.
- இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ்
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு விஜய்யோட அமைதி ரொம்ப பிடிக்கும். அதிகம் பேசமாட்டார். செயல் அதிகமா இருக்கும் வார்த்தை குறைவா இருக்கும். எனக்கு டிரஸ்ட்டில் சில உதவிகள் தேவைப்படும் போது எப்போ போன் பண்ணாலும் உடனே அந்த உதவி செய்வார்.

ராகவா லாரன்ஸ்
நான் வளர்க்கும் என்னுடைய குழந்தைகள் விஜய் சார் படம் வெளியான போது படம் பாக்கனும் னு கேட்பார்கள். நான் விஜய் சாருக்கு அழைத்து இது குறித்து கேட்டேன். அவர் அவங்களுக்காக தனியா ஷோவே போடலாம் என்று சொன்னார். விஜய் சாருடன் நடிக்கனும்னு எழுதிருந்து அது நடந்தா.. முதல்ல சந்தோஷப்படுறது நானாதான் இருப்பேன் என்று கூறினார்.
- ராஜ் மற்றும் டீ.கே இயக்கத்தில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்துள்ளார்.
- இந்த வெப் தொடரின் விழாவில் சமந்தா உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தற்போது "தி ஃபேமிலி மேன்" வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீ.கே இயக்கி வரும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுடன் இணைந்து வருண் தவான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்து சமந்தாவின் தோற்றத்தை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

சிட்டாடல் படக்குழு
இந்நிலையில் சிட்டாடல் பட விழாவில் சமந்தா, இயக்குனர் ராஜ் மற்றும் டிகே உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
As we await the world premiere of #Citadel ? pic.twitter.com/DKvxTRlo8e
— Raj & DK (@rajndk) April 19, 2023
- தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் பிரியங்கா மோகன்.
- இவர் தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ஓஜி படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் பிரியங்கா மோகன். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா மோகன், பவன் கல்யாண் நடித்து வரும் ஓஜி படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை சுஜீத் இயக்கவுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
???????? ?????… We are very happy & excited to have you on board for #OG. ❤️@PawanKalyan @PriyankaaMohan @sujeethsign @dop007 @MusicThaman #ASPrakash @DVVMovies #FireStormIsComing#TheyCallHimOG pic.twitter.com/OMED1rGkrF
— DVV Entertainment (@DVVMovies) April 19, 2023
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன்.
- இவர் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, அசூரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றார்.

தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது, "கலைக்கு மொழி இல்லை என்று சொல்வார்கள், ஆனால் கலைக்கு நிச்சயமாக மொழி இருக்கிறது. கலை அதன் எல்லைகளை கடந்து போகும்.

யாருமே அவர்கள் மண்ணிற்கு வெளியே உள்ள மக்களை குறித்து வைத்து படம் எடுப்பதில்லை. நம்முடைய கதைகளை நம் மக்களுக்காக சொல்லும் போது அது உணர்வாக உலக அளவில் ஏற்கப்பட்டு நல்ல வரவேற்பை பெறுகிறது. நம்முடைய அடையாளங்கள், தனித்துவங்கள், பெருமைகள் கொண்ட மண் சார்ந்த கதைகளை படமாக எடுப்பதால் தான் தென்னிந்திய படங்களுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தான் கடந்த சில ஆண்டுகளாக வெற்றியை பெற்றுள்ளன" என்று பேசினார்.
- இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பண்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன்.
- பார்த்திபன் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1989ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி தேவை, ஹவுஸ் ஃபுல், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர்.

பார்த்திபன்
இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பார்த்திபன்
பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், 'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் நடிகர் பானுசந்தருக்கு பார்த்திபன் டப்பிங் கொடுத்த வீடியோவை பகிர்ந்து, இந்தக் குரல் யாரெனத் தெரிகிறதா? என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பார்த்திபன் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், பொருள் for my குரல்! 'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் திரு. பானுசந்தருக்கு நான் குரல் கொடுத்ததற்கு ஒரு 1500 கொடுத்தார்கள். இப்படி மாதம் some of ரூ6000 சம்பாதிக்கும் சமயத்தில் என் குருவிடம் ரூ300 பெற்று தொழில் கற்க சென்றதால் இன்று இந்நல்ல நிலையில் உள்ளேன். இல்லையேல் highly paid dubbing artist or junior artist ஆக இருந்திருக்க வாய்ப்புண்டு. சில வேளைகளில் பணத்தை மீறி எடுக்கும் சில முடிவுகள் உயர்வுக்கு காரணமாகும் என்று பதிவிட்டுள்ளார்.
Good morning
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 19, 2023
பொருள் for my குரல்!
'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் திரு. பானுசந்தருக்கு நான் குரல் கொடுத்ததற்கு ஒரூ1500 கொடுத்தார்கள்.இப்படி மாதம் some of ரூ6000 சம்
பாதிக்கும் சமயத்தில் என் குருவிடம் ரூ300 பெற்று தொழில் கற்க சென்றதால் இன்று இந்நல்ல நிலையில் உள்ளேன். pic.twitter.com/33rRGdV6sy
- மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

மாவீரன்
இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் நாயகியாக நடித்துவர் ஷாம்லி.
- நடிகை ஷாம்லி ஓவிய கலைஞராக மாறி கண்காட்சிகள் நடத்தி வருகிறார்.
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியானவர் ஷாம்லி. இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை ஷாலினியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாம்லி
இந்நிலையில் நடிகை ஷாம்லி ஓவிய கலைஞராக மாறி கண்காட்சிகள் நடத்தி வருகிறார். ஓவியங்களில் ஷாம்லி பயன்படுத்தும் கோடுகள், வளைவுகள், வண்ணங்கள் வரையறைகள் தனித்துவமாகவும், ஓவியங்களில் இடம்பெறும் பெண்கள் தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன என்றும் பலர் பாரட்டி உள்ளனர்.

ஷாம்லி
ஓவியரானது குறித்து ஷாம்லி கூறும்போது, "நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். கதாநாயகியாகவும் வந்தேன். ஓவியக்கலை மீது ஏற்பட்டுள்ள ஈடுபாடு காரணமாக ஓவிய துறையில் திறமை பெற்றவர்கள் மூலம் ஓவியம் வரைய கற்றேன். அமெரிக்கா சென்றும் ஓவியம் வரைய பயின்றேன். பெங்களூர், சென்னை ஓவிய கண்காட்சியில் ஓவியங்களை காட்சிப்படுத்தினேன். 300 கலைஞர்களுக்கு மேல் பங்கேற்ற துபாயில் உள்ள சர்வதேச ஓவிய கலைக்கூடத்திலும் எனது ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்தேன். அடுத்து சென்னையில் தனியாக ஓவிய கண்காட்சி நடத்த இருக்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து சிந்திக்கவில்லை'' என்றார்.






