என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    மேலு இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இன்று கொச்சினுக்கு சென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன் -2

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஹரிசரண் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    ஃபர்ஹானா

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    ஃபர்ஹானா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபர்ஹானா' படத்தின் டீசர் வருகிற 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஃபர்ஹானாவுக்கு வாழ்க்கை சவால்களை அளிக்கும் போது அவள் என்ன செய்வாள் 22-ஆம் தேதி டீசரை பார்த்து உத்வேகம் பெற தயாராகுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோல்டு’.
    • கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    பிரேமம்

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் 'நெஞ்சுக்கு நீதி', 'வீட்ல விஷேசம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

    இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றாவது முறையாக அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் நான் இயக்கும் படத்திற்குப் பிறகு, இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புர்கா’.
    • இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

    இயக்குனர் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'புர்கா'. இப்படத்தில் கலையரசன், மிர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைத்திருந்தார்.


    புர்கா

    இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவின் பின்னணியில் உருவான இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. இப்படம் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், இஸ்லாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்தும் வகையில், ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் 'புர்கா' திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


    புர்கா

    இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக் காட்டமுனைவது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

    நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் படைப்பாளிகள் தங்களின் கடமையை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.


    சீமான் அறிக்கை

    தற்போது 'ஆகா' ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.


    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’.
    • அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    அயோத்தி

    இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் 50-வது நாள் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசியதாவது, ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு உயிரோடி இருக்கும் ஒரு திரைப்படம் கிடைத்திருக்கிறது. சில திரைப்படங்கள் ஒரு 100 வருடம் பேசப்படும். ஆனால், அயோத்தி திரைப்படம் திரையுலகம் இருக்கும் வரை பேசப்படும்.


    அயோத்தி

    நானும் சசிக்குமாரும் பார்க்கும் பொழுது அவர் ஒரு நான்கு கதையை கூறினார். அதில், அயோத்தி திரைப்பட கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சரியான கதைகள் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் அது தேர்ந்தெடுக்கும். அப்படி தான் 'அயோத்தி' திரைப்பட கதையும் தேர்ந்தெடுத்திருக்கிறது. சசிகுமார் இந்த படத்தில் நடிக்கவே இல்லை. அவருடைய இயற்கையான குணமே அப்படிதான். சசிகுமாரின் மனதிற்கு ஏற்றவாறு ஒரு படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று கூறினார்.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தசரா

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வெளிநாடு பாக்ஸ் ஆபிசில் இரண்டு மில்லியன்களையும் இந்தியாவில் ரூ.110 கோடியையும் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படக்குழு 'தசரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    தசரா போஸ்டர்

    அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா புகாரளித்தார்.
    • நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

    சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

    சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ணவ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


    அர்ணவ் -திவ்யா

    அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறி உள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு. அவர் தான் என்னை துன்புறுத்தினார். இது தொடர்பாக எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேஎன்ஆர் மூவிஸ் சார்பில் கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். இதில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.


    ராதாரவி

    ராதாரவி

    இப்படம் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் உருவாகியுள்ளது. 'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பிறகு நடிகர் ராதாரவி பேசியதாவது, "மதுவை ஒழிப்போம்.. மக்களை காப்பாற்றுவோம்.. விவசாயிகளை காப்பாற்றுவோம்.. பெண்களை காப்பாற்றுவோம் என ஒரு நல்ல கருத்தை இதில் சொல்லி இருக்கிறார்கள்.


    ராதாரவி

    ராதாரவி


    இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்கும்போது இது நான் நடித்த படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாறுதலாக இருக்கிறது. தண்ணீர் எவ்வளவு நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதை தான் இதில் காட்டியிருக்கிறார்கள்.. இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்" என்றார்.

    • கமல் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


    மணிரத்னம் - கமல்
    மணிரத்னம் - கமல்

    இந்நிலையில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானல் இதன் மூலம் நயன்தாரா முதல் முறையாக கமலுடன் இணைவார். 


    கமல் - நயன்தாரா
    கமல் - நயன்தாரா

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பை ரஜினி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஜெயிலர்

    ஜெயிலர்

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர்.


    ஜெயிலர்
    ஜெயிலர்

    இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 .3 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    பத்து தல

    சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதையடுத்து 'பத்து தல' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நம்ம சத்தம்' பாடலின் வீடியோ இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'.
    • இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    சில நேரங்களில் சில மனிதர்கள், நவீன சரஸ்வதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் சொல் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடேட் (Sol Production Pvt.Ltd) சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள வெப்தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'. என். பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் ஆகியோர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் தொடரில் அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடருக்கு பர்மா, என்னோடு விளையாடு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுதர்சன் எம் குமார் இசையமைத்துள்ளார். 



    இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகை அபிராமி பேசியதாவது, "நடிகை அபிராமி  பேசியதாவது, இந்த மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ஜீ5- க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும்.


    இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீனேஜ் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி" என்று கூறினார்.


    மேலும், நடிகர் ராகவ் பேசியதாவது, இந்த சீரிஸ் பாம்பே நிறுவனத்தின் தயாரிப்பு,  எழுத்தாளரும் மும்பையை சேர்ந்தவர். ஆன்லைனில் ஆடிசன் கேட்டிருந்தபோது,  நான் இதில் வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் சார்மிங்காகவும் இருக்கனும் வயலண்டாகவும் இருக்கனும் அப்படி ஒரு ஆள் தேவை என்றார்கள். இதே காரணத்திற்காக தான் பாலசந்தர் சார் என்னை நடிக்க வைத்தார். என்னைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதால், நான் ஒரு காட்சி நடித்து அனுப்பினேன். அவர்களுக்கு பிடித்து என்னை நடிக்க வைத்தார்கள். கௌஷிக் உடன் முன்பாகவே இணைந்து ஒரு சீரிஸ் வேலை பார்த்தோம் அது வெளியாகவில்லை, ஆனால் இந்த சீரிஸில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள் இந்த சீரிஸ் சிறப்பாக வர வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்  நன்றி என்று பேசினார்.

    ×