என் மலர்
சினிமா செய்திகள்
- மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரேகா நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை ஏ.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நடைபெற்றது.

விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி
இதில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், மயில்சாமியின் மகன் அன்பு, படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படி நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்பிபி, விவேக், அடுத்து மயில்சாமி உள்ளிட்ட சிலரின் மரணங்கள் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன.

விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி
மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல அவர் தீவிரமான எம்ஜிஆர் பக்தரும் கூட. ஆனால் அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். ஆனால் தான் இறக்கும் வகையில் எம்ஜிஆரின் உண்மை தொண்டனாகவே அவர் பெயர் சொல்லும் விதமாக வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி. அதுமட்டுமல்ல தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமித்தி அமரலாம்.

விளம்பரம் குறும்பட நிகழ்ச்சி
விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்" என்று கூறினார்.
- 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழு
மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு கோவை, டெல்லி, கொச்சின் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்
இந்நிலையில் கொச்சினை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளனர். அதன்படி வருகிற 23ம் தேதி 5.30 மணிக்கு நொவோட்டல் ஹைதராபாத் கன்வென்ஷன் சென்டரில் (Novotel Hyderabad Convention Centre) நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
The Cholas are coming to Hyderabad!
— Madras Talkies (@MadrasTalkies_) April 21, 2023
On April 23rd at 5:30 PM?Novotel Hyderabad Convention Centre.#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions… pic.twitter.com/eZ52fXjthT
- மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர்.
- இவர் மதுரையில் நடந்த ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்.
சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதன்பின்னர் ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரின் பாரட்டுக்களையும் பெற்றார்.

அமீர்
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம், திருமங்கலம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இதில் இயக்குனர் அமீர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி.
- இவருடைய தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை காலமானார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மம்முட்டி - பாத்திமா இஸ்மாயில்
நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 93 வயதாகும் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார்.
- இவர் தனது டுவிட்டர் கணக்கில் புளூ டிக்கை இழந்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு 1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

குஷ்பு
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் கணக்கின் புளு டிக்கை இழந்தார். இது குறித்து டுவிட்டரிடம் கேள்வி எழுப்பிய குஷ்பு, டியர் டுவிட்டர், என் புளூடிக் ஏன் ஒரே இரவில் காணாமல் போனது?? எனது கணக்கு செயலில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்றும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Dear @TwitterBlue why has my bluetick disappeared overnight?? My account is active.
— KhushbuSundar (@khushsundar) April 21, 2023
- டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
- தற்போது சந்தா செலுத்தாத ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி
இந்நிலையில் சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.
சந்தா கட்டியவர்களின் கணக்குளின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.
- வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ’விடுதலை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காட்டு மல்லி' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா மற்றும் அனன்யா பாட் பாடியுள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ முன்பே வெளியாகி கவனம் பெற்றதையடுத்து தற்போது இப்பாடலின் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மணிரத்னம் -கமல்ஹாசன்
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'கேஎச்234' படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்து விட்டதாகவும் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலானது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
- அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன்.
- இவர் ஐஸ்வர்யா ராயுடன் அடிக்கடி விருது நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சன் (12). அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும் சினிமா விழாக்களுக்கும் சென்று வருகிறார். சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூ டியூப் சேனல்கள் வதந்தியை பரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்தியா பச்சன் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ஆராத்யா தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை இணையதளங்கள் நிறுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சி. ஹரி சங்கர் கூறியதாவது:- பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியரின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன்நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் சகிக்க முடியாதது என கூறினார்.
- 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் -2
மேலு இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இன்று கொச்சினுக்கு சென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் -2
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஹரிசரண் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’.
- இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஃபர்ஹானா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஃபர்ஹானா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஃபர்ஹானா' படத்தின் டீசர் வருகிற 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஃபர்ஹானாவுக்கு வாழ்க்கை சவால்களை அளிக்கும் போது அவள் என்ன செய்வாள் 22-ஆம் தேதி டீசரை பார்த்து உத்வேகம் பெற தயாராகுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
What would she do, when life threw challenges at #Farhana. Watch the #FarhanaTeaser on 22nd April and get ready to be inspired @nelsonvenkat @aishu_dil @selvaraghavan @aishwaryadutta6 @anumolofficial @JithanRamesh @justin_tunes @gokulbenoy @EditorSabu @sivadigitalart pic.twitter.com/WenLiTYo2N
— aishwarya rajesh (@aishu_dil) April 20, 2023
- இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோல்டு’.
- கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பிரேமம்
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் 'நெஞ்சுக்கு நீதி', 'வீட்ல விஷேசம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றாவது முறையாக அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் நான் இயக்கும் படத்திற்குப் பிறகு, இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.






