எப்போதும் 'செண்டிமெண்ட்' கை கொடுக்காது.. சமந்தாவை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சமந்தா -சிட்டிபாபு
சமந்தா -சிட்டிபாபு
Published on

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவான 'சாகுந்தலம்' திரைப்படம் தற்போது வரை ரூ.10 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாகுந்தலம்

இதையடுத்து, தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருக்கும் சிட்டிபாபு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நடிகை சமந்தா பற்றி பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறியதாவது, எல்லா தடவையும் 'செண்டிமெண்ட்' கை கொடுக்காது. பாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் தரக்குறைவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள். கதாநாயகி அந்தஸ்தை இழந்த சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்திற்கு எப்படிப் பொருந்தினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு சாகுந்தலம் திரைப்படம் குறித்து எந்த ஆர்வமும் இல்லை என்று பேசியிருக்கிறார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com