'மகிமை ஆலயம்' பாடலின் வீடியோ வெளியிட்ட சாகுந்தலம் படக்குழு

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’.இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சாகுந்தலம்
சாகுந்தலம்
Published on

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'மகிமை ஆலயம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com