என் மலர்
சினிமா செய்திகள்
- விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “குலசாமி”.
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது, இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன். சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார். அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர்.

அதன்பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர். நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதன்பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன் அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார். அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான். ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம்.
படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது. "சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார்" என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன். அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார். அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார். இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது. இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன் உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும், நன்றி என்றார்.
குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம், தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம், தமிழில் முறை மாமன், தென்னாலி, நைனா, துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
- இந்த வழக்கில் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து ரூ.4.50 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலை வங்கியில் செலுத்திய போது அவர் கணக்கில் இருந்து பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தொடங்கினார். இதன் பின்னர், முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு கோபி தரப்பு வக்கீல் ஆர்.வெங்கடேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் தரப்பில் வாதிடப் பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூ. 300 வழக்கு செலவு (அபராதம்) விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
- மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் திரிஷா.
- இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் திரிஷா உள்ளிட்ட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

திரிஷா
இந்நிலையில் திரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது. நீல நிற உடையில் திரிஷா இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.
??♀️? pic.twitter.com/hrFTcZAWKD
— Trish (@trishtrashers) April 18, 2023
- இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படம் ‘சித்தா’.
- இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைக்கிறார்.

சித்தா முதல் தோற்ற போஸ்டர்
ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழு
மேலு இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. பொன்னியின் செல்வன் படக்குழு நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது தஞ்சாவூருக்கு படக்குழு செல்லாதது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கார்த்தி அளித்த பதில், "பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் லாஞ்ச் தஞ்சாவூரில்தான் வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரொனா மூன்றாவது அலை ஆரம்பித்ததால் அங்கு நடத்த முடியவில்லை. மேலும் புரோமோஷனுக்கும் செல்ல முடியவில்லை. பொன்னியின் செல்வன் 2 புரோமோஷனுக்கு நிச்சயம் நாங்கள் தஞ்சாவூருக்கு செல்வோம். அந்தத் திட்டம் எங்களிடம் இருக்கிறது" என்றார்.
- விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'. இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆய்வுக் கூடம்' திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர் இந்த மனுவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்தவொரு தகவலும் தமக்கு தெரியாது என்றும் அந்த படத்தை பார்த்தது கூட இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு தொடரப்பட்ட பிறகே அந்த படத்தை பார்த்ததாகவும் பிச்சைக்காரன் -2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தனக்கு பெருத்த இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் ஆண்டனி அந்த பதில் மனுவில் வேதனை தெரிவித்துள்ளார்.
பிச்சைக்காரன் கதை கரு பொதுவெளியில் உள்ளதோடு இதே கதைகருவோடு 1944-ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளதாகவும் இந்த கதையின் கருவை மனுதாரர் உரிமை கோர முடியாது என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை நீதிபதி ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
- விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "குலசாமி".
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது, இயக்குனர் சரவண சக்தி என்னுடைய நண்பர். நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குனர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.

இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள். இவ்வாறு அமீர் பேசினார்.
குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- சில தினங்களுக்கு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள்நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு நடிகை பூர்ணாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். பூர்ணா - ஷனித் அசிப் அலி தம்பதியினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் பூர்ணா - ஷனித் அசிப் அலி தம்பதி குழந்தையின் பெயரை சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி குழந்தைக்கு ஹம்டன் ஆசிப் அலி என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படக்குழு
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படக்குழு
பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு நேற்று முன்தினம் கோயம்பத்தூருக்கு சென்றிருந்தனர். அதன்பின்னர் நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு இன்று இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு படையெடுத்துள்ளது. அப்போது விமானத்தின் முன்பு கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம், திரிஷா, சோபிதா மற்றும் ஜெயம் ரவி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
Majestic and stylish! Embodying the spirit of the Cholas in the 21st century.
— Lyca Productions (@LycaProductions) April 18, 2023
Here we come Delhi. Get ready! #CholaTour#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/vLD6861V2V
- நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.
- இந்த போட்டியை நடிகர் தனுஷ் நேரில் சென்று பார்த்து ரசித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை நடிகர் தனுஷ் நேரில் சென்று கண்டுகளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் இலியானா.
- இலியானா தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் இலியானா டிகுரூஸ். இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். நண்பன் படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்த இலியானா, அதன்பின்னர் உடல் எடை கூடி இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், விரைவில், என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டுள்ளார்.

இலியானா அறிவிப்பு
அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பதால் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






