என் மலர்
சினிமா செய்திகள்
- கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் டக்கர்.
- இப்படத்தின் டீசரை சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், தற்போது நடித்துள்ள படம் 'டக்கர்'. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார்.சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இதில் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ளனர்.

டக்கர்
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு டக்கர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் வருகிற மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ருத்ரன்.
- இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ருத்ரன்
இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி, முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ருத்ரன்
இந்நிலையில், ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ள என்ன பெத்த அம்மாவே என்ற பாடலை படக்குழு நாளை வெளியிடவுள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
- இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
- இப்படத்தின் படப்பிடிப்பை எஸ்.ஜே.சூர்யா நிறைவு செய்துள்ளார்.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மார்க் ஆண்டனி படக்குழு
சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பை படக்குழு இன்று நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் நடிகர்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு கோயம்பத்தூருக்கு சென்றிருந்தது. அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட நடிகர்களின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Clicks from last night's event!
— Lyca Productions (@LycaProductions) April 17, 2023
Coimbatore, your love and energy were simply amazing!
Stay tuned for more from the #CholaTour#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/r1nATsspC4
- மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
- இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மாரிசெல்வராஜ் -தனுஷ்
மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தனுஷ் -மாரி செல்வராஜ்
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும் இப்படம் தனுஷின் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டணியில் நடிகர் வடிவேலு இணையவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் தனுஷ் உடன் வடிவேலு முதல் முறையாக இணையவுள்ளார்.
இதற்கு முன்பு தனுஷ் நடித்த 'படிக்காதவன்' படத்தில் சில நாட்கள் வடிவேலு நடித்த நிலையில் பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகி, விவேக் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் -2
இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புரொமோஷனுக்காக நடிகை திரிஷா மற்றும் ஜெயம் ரவி தங்களது பெயர்களை டுவிட்டரில் குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் என்று மாற்றினர். இதைத்தொடர்ந்து அவர்களது ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியான திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தது போல் மாற்றியிருக்கிறார், இருந்தும் அவருக்கு ப்ளூ டிக் கொடுக்கப்படவில்லை. டுவிட்டரின் புதிய விதிகளின் படி கணக்குகளின் பெயர்களை மாற்றியதால் இருவரும் தங்களது ப்ளூ டிக்கை பறிக்கொடுத்துள்ளனர்.

ப்ளூ டிக்கை இழந்த திரிஷா மற்றும் ஜெயம்ரவி
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தின் வெளியீட்டின் போதும் இதே போல் தங்கள் கதாபாத்திரத்தின் பெயர்களை திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் மாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல பாடகராக வலம் வருபவர் மனோ.
- பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல பாடகராக வலம் வருபவர் மனோ. இவர் பாடகராக மட்டுமில்லாமல் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் குரலில் வெளியான ஷெண்பகமே ஷெண்பகமே, நீ ஒரு காதல் சங்கீதம், ராசாத்தி மனசுல, நூறு வருஷம், ஒரு மைனா மைனா குருவி என பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக இருந்து வருகிறது. மேலும் சிங்கார வேலன், எனக்கு 20 உனக்கு 18, சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் பின்னணி பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. பாடகர் மனோ, 38 ஆண்டுகளில் 15 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இதற்காக, மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, மனோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Bestowed with #Doctorate by Richmond Gabriel University on my completion more then 25k songs 15 Indian languages and 38years in Indian musical industry as a singer and musician.
— Dr Mano (@ManoSinger_Offl) April 16, 2023
Humbled, Honoured and much love to all who has supported me, all always ? pic.twitter.com/lEkMxmALPt
- இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம்
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.

துருவ நட்சத்திரம் போஸ்டர்
இந்நிலையில், நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னியிட்டு 'துருவ நட்சத்திரம்' படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Wishing @chiyaan a very Happy Birthday!#DhruvaNatchathiram @Jharrisjayaraj @OndragaEnt @oruoorileoru @manojdft @srkathiir @the_kochikaran @editoranthony @riturv @realradikaa @SimranbaggaOffc @rparthiepan @DhivyaDharshini @rajeevan69 @Kumar_gangappan @Kavithamarai @utharamenon5 pic.twitter.com/TmfW15RxCe
— Gauthamvasudevmenon (@menongautham) April 17, 2023
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் -2
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விக்ரம் பிரபு 'பார்த்திபேந்திர பல்லவன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Take a look at @iamvikramprabhu being the symbol of friendship, loyalty, and bravery as the valiant #ParthibendraPallavan.#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/Lv2YHiLeqC
— Lyca Productions (@LycaProductions) April 17, 2023
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

லியோ
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் ரசிகர்கள் 'லியோ' அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர். இதற்கு திரிஷா, "நீங்கள் எங்கே போனாலும் இந்த கேள்வி கேட்பதனால் சொல்கிறேன். 'லியோ' படப்பிடிப்பில் இருந்து தான் வருகிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உங்க தளபதி விஜய் எல்லோரும் நல்லாயிருக்காங்க, மற்றவை 'லியோ' நிகழ்ச்சியில் பேசலாம்" என்று கூறினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைதட்டல்களால் அரங்கத்தை அதிர செய்தனர்.
- ரவி வி சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஸ்ரீ ராமானுஜர்’.
- இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ரவி வி. சந்தர் இயக்கத்தில் ஹயக்ரீவா சினி ஆர்ட்ஸ் (Hyagreeva cine Arts) நிறுவனம் சார்பில் டி. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் 'ஸ்ரீ ராமானுஜர்'. இந்த படத்தில் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து டி. கிருஷ்ணன் கூறியதாவது, இது முழுக்க முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம். மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் நிறுவனத்தின் மூலம் திரைப்படமாக எடுத்ததை பெருமையாக நினைக்கிறோம்.

ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார். சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர். இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இளையராஜா இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம்.

மேலும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும். வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என்று கூறினார்.
- இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘800’.
- இப்படம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக உருவாகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'கனிமொழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' படத்தை இயக்கி வருகிறார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

800முதல் தோற்ற போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து '800' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் முத்தையா முரளிதரனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
'800' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.






